துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டமா?

Report Print Printha in வாழ்க்கை
305Shares
305Shares
lankasrimarket.com

துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வது போன்ற பல கூற்றுகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அதுபோன்ற கூற்றுகள் எந்த வகையில் உண்மை என்பதற்கு உதாரணமாக ஒருவரின் வாழ்க்கை கதையை படிக்கலாம் வாங்க,

குறைந்த வருமானத்தில் ஒரு ஏழை தனது வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒருநாள் அவனுக்கு பழங்கால காசு ஒன்றை தெருவில் இருந்து கண்டெடுத்தான்.

அந்த காசின் நடுவில் துளை ஒன்றை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்ற ஒரு நம்பிகை இருந்ததால், அவனும் அதிர்ஷ்டம் என்னை தேடி வரும்.

அதனால் விரைவில் நான் பணக்காரனாகிடுவேன் என்று நம்பிக்கை கொண்டு அந்த காசை தனது கோட்டு பையிலே போட்டு வைத்திருந்தான்.

அதேபோல் அன்று அவனுக்கு மற்ற நாட்களை விட அதிக வருமானம் கிடைத்தது. இவை அனைத்துமே அந்த துளையிட்ட காசு கிடைத்த நேரம் தான் என்று நினைத்துக் கொண்டான்.

அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டு பையில் உள்ள காசை தொட்டு பார்த்துக் கொள்வானே, தவிர அதை வெளியில் எடுக்கவே மாட்டான்.

சில ஆண்டுகளில் அவனுக்கு பணம், பதவி என அனைத்தும் வந்து சேர்ந்தது. பல வருடங்களுக்கு பின், ஒரு நாள் அவன் தன் மனைவியிடம் அந்த துளையிட்ட காசை நான் பார்க்க வேண்டும் கூறி அதை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தான்.

ஏனெனில் அந்த காசில் துளையே இல்லை. குழப்பத்தில் இருந்த அவன் தன் மனைவியிடம் கேட்ட போது அவள், என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் கோட்டு தூசியாக இருந்தது.

அதனால் நான் அதை உதறினேன் அப்போது காசு கீழே விழுந்து விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் நான் வேறொரு காசை அதில் போட்டு வைத்து விட்டேன் என்று கூறினாள்.

உடனே அவன் இது எப்போது நடந்தது என்று கேட்டான். அதற்கு அவள், அந்த காசு உங்களுக்கு கிடைத்த மறுநாளே என்று கூறினாள்.

அதன் பின் அமைதியாக சிந்தித்த அவன், உண்மையில் அதிர்ஷ்டத்தை கொடுத்தது அந்த துளையிட்ட நாணயம் இல்லை. எனது நம்பிக்கை தான் என்பதை உணர்ந்து உற்சாகத்துடன் பணியை தொடர்ந்தான்...

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்