ஒருவரை மரணம் நெருங்கும் முன் எமதர்மராஜா ஏற்படுத்தும் அந்த 4 அறிகுறிகள் இதுதானா....

Report Print Printha in வாழ்க்கை
1410Shares

ஒருவருக்கு மரணம் நெருங்கும் முன் எமதர்மராஜன் அனுப்பும் அந்த 4 விதமான அறிகுறிகள் என்ன? உங்களுக்கு தெரியுமா?

பண்டைய காலத்தில், யமுனா ஆற்றங்கரையின் அருகே அம்ரிதா என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். மற்றவர்களைப் போலவே, இவனுக்கும் மரணம் பற்றிய பயம் இருந்தது.

எனவே அவன் மரணத்தில் இருந்து தப்பிப்பதற்கு, எமதர்மராஜனை வேண்டி கடுமையாக தவம் மேற்கொண்டான்.

இதனால் மனம் குளிர்ந்த எமதர்மராஜன், அம்ரிதாவின் முன் தோன்றி, நான் இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் அல்லது இறந்தவர்கள் முன் தான் தோன்றுவேன்.

ஆனால் முதல் முறையாக உன் தவத்தால் உயிருடன் உள்ள ஒரு மனிதனின் முன் தோன்றியுள்ளேன் என்றார்.

அதற்கு அம்ரிதா எனக்கு ஒரு வரம் வேண்டும். நீங்கள் எனக்கு நெருங்கும் முன் குறைந்தது எனக்கு ஒரு கடிதத்தை அனுப்புங்கள்.

இதனால் நான் என் குடும்பத்தை சரியான நிலையில் வைத்து, அடுத்த ஜென்மம் எடுப்பதற்காக கடவுளைத் தொழுது என்னை நானே தயார் செய்து கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டான்.

அம்ரிதா கேட்ட வரத்திற்கு எமதர்மராஜனும் ஒப்புக் கொண்டு மறைந்து விட்டார்.

சில வருடங்களுக்குப் பின், அம்ரிதா எமனின் கடிதம் நமக்கு வரவில்லை என்று நினைத்துக் கொண்டு மரணத்தின் மீதுள்ள பயத்தை மறந்து அனைத்து வகையான பாவ செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

நாட்கள் இப்படியே செல்ல, அம்ரிதாவிற்கு வயதாகி, ஒருநாள் அவனது தலைமுடி நரைத்து, பற்கள் மற்றும் கண் பார்வைகளை இழந்தான்.

அப்போதும் அவன் இறப்பின் மீது கவலைக் கொள்ளவில்லை. ஏனெனில் எமனிடம் இருந்து கடிதம் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் நடக்க முடியாமல் உடல் முடங்கி போனது.

அப்போது ஒருநாள் எமன் அம்ரிதாவை அழித்துச் செல்ல வந்தார். அப்போது அம்ரிதா அதிர்ச்சிக்குள்ளாகி எமனிடம், கடவுளே, மரணம் என்னை நெருங்கும் முன் கடிதம் அனுப்புவேன் என்று எனக்கு வரமளித்து ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினான்.

அதற்கு எமன் நீ உன் வாழ்க்கை முழுவதையும் பாவ செயல்களில் ஈடுபடுத்தி, ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் காட்டாமல் இருந்து விட்டாய்.

பின் எப்படி என்னுடைய கடிதம் உன்னை அடைந்ததை நீ உணர்ந்திருப்பாய்? நான் இதுவரை 4 கடிதங்களை உனக்கு அனுப்பி விட்டேன் என்று கூறினார்.

மரணத்திற்கு முன் எமன் அனுப்பிய நான்கு அறிகுறிகள் என்ன?

எமனின் கூற்றுப்படி, அம்ரிதாவை மரணம் நெருங்கும் முன் 4 மாற்றங்கள் அவனின் உடலினுள் ஏற்பட்டுள்ளது. அவைகள்,

  • தலைமுடி நரைத்தது, எமன் அனுப்பிய முதல் கடிதமாக கூறும் அறிகுறி.

  • பற்கள் முழுவதையும் இழந்தது, எமன் அனுப்பிய இரண்டாவது கடிதமாக கூறும் அறிகுறி.

  • கண் பார்வையினை இழந்தது, எமன் அனுப்பிய மூன்றாவது கடிதமாக கூறும் அறிகுறி.

  • நடக்க முடியாமல் உடல் முடங்கி போனது, எமன் அனுப்பிய நான்காவது கடிதமாக கூறும் அறிகுறி.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments