காலடி மண்ணை எடுத்து சூனியமா? அதிர்ச்சி தரும் தகவல்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை

நமக்கு ஒரு கண் போனால், நம் எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தான் இந்த உலகில் அதிகமாக வசிக்கிறார்கள்.

குறிப்பாக, எதிரியுடன் நேரடியாக போராடி ஜெயிப்பதை விட மறைமுகமாக அவனை அழிக்க வேண்டும், அல்லது ஏதேனும் ஒரு பில்லி சூனியம் பின்பற்ற அவர்களை அழித்துவிட வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சில நேரத்தில் இந்த மாந்திரீகமும் கைகொடுக்கிறது என்று கூறப்படுகிறது.

பில்லி சூனியத்தை நம்புவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கையில், அதனை ஏவ விடுவதற்கு பல கூட்டம் இருக்காதா என்ன?

ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதாகும்.

அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும்.

அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

இந்த முறைகள் ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அதிகமாக பின்பற்றப்படுகிறது. பில்லி சூனியத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments