நீங்க எந்த ராசி? காதலில் அதிக ஈடுபாடாம்

Report Print Printha in வாழ்க்கை

ஜோதிடம் என்பது ஒரு மூடநம்பிக்கை என்று சிலர் கூறினாலும் அது நம்மை பற்றி என்ன கூறுகிறது என்று தெரிந்துக் கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.

ஜோதிடத்தில் இருக்கும் ஒவ்வொரு ராசிக்கும் ஓவ்வொரு தனிச்சிறப்புகள் இருக்கிறது.

அதிலும் அந்த ராசியை வைத்து ஒருவருடைய குணம் மற்றும் எதிர்காலத்தில் அமையும் வாழ்க்கை என்று இது போன்ற பல விஷயங்களை பற்றிக் கூறலாம்.

ஆனால் இப்போது எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வமாக இருப்பார்கள் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

காதலில் அதிக ஈடுபாடுகள் கொண்ட ராசிகள்

காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ஐந்து வகையான ராசி உள்ளவர்கள் காதலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஐந்து ராசிக்காரர்களின் குணங்கள்

ஐந்து ராசிகளை உடையவர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டு காதலிப்பார்கள். மேலும் உண்மையாக காதலர்களை சேர்த்து வைக்கும் நல்ல குணங்களை உடையவர்கள்.

ஆனால் இந்த ஐந்து வகை ராசிகளிலும் அவர்களின் காதல் திருமணம் என்று பார்க்கும் போது, அவரவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்து தான் தீர்மானிக்க முடியும்.

இதில் தனுசு ராசிக்காரர்கள் மட்டும் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிகவும் உண்மையாகவும், உறுதியுடன் இருப்பார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் காதலித்துக் கொண்டே மட்டும் இருப்பார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் நல்ல நிலையில் இருந்தால், அவர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார்கள்.

அதுவே ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அவர்கள் காதலில் தோல்வி அடைந்து, வேறு திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியும் நிலைகள் ஏற்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் அதிபதிகள் 7 அல்லது 8 ஆம் என்ற பாகத்தில் நல்ல நிலையில் இருந்து, கெட்ட கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு பெற்றோர் முடிவு செய்யும் திருமணம் நடைபெறும்.

ஒருவரின் ஜாதகத்தில் களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், அவர்களுக்கு சொந்தத்தில் இருக்கும் அத்தை, மாமன் போன்ற உறவு முறையில் திருமணம் நடைபெறும்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments