பிறந்தது பெண்ணாக...ஆனால் அந்த தருணங்களில் நான் பட்ட துயரங்கள்! உண்மை கதை

Report Print Fathima Fathima in வாழ்க்கை

கடந்த ஐந்து ஆண்டுகளாக என் வாழ்வில் எந்தவொரு சந்தோஷமும் இல்லை, என்னசெய்வதென்றே புரியாமல் குழம்பி தவித்தேன்...என்னை எப்படி இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்? நான் ஏன் இப்படி மாறிக் கொண்டிருக்கிறேன்? என பல கேள்விகளுடன் சோகம் நிறைந்த வாழ்க்கையை பற்றி பேசுகிறார் Vihaan Peethambar.

இவர் பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர், பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

பிறந்தது பெண்ணாக என்றாலும், ஒருநொடி கூட பெண்ணாக உணர்ந்ததில்லை என்கிறார், ஆணுக்கான குணாதிசயங்கள் மட்டுமே என்னுள் இருந்தது என கூறும் Vihaan Peethambar, தற்போது முழுமையாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறிவிட்டாராம்.

இதற்கு தன்னுடைய குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர் ஒருவரும் உறுதுணையாக இருந்தாகவும், அவர்கள் என்றென்றும் வாழ்வில் நலமுடன் இருக்க கடவுளை பிரார்த்திக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

மிக மகிழ்ச்சியாக, தைரியத்துடன் இந்த உலகை எதிர்கொள்ள புரப்பட்டாலும், திருநங்கைகள் இந்த உலகில் படும் துயரங்களை பார்த்து கண்ணீர் வடிக்கிறாராம்.

திருநங்கைகளுக்கும் நடக்கும் சமூக அவலங்களை பற்றி படிக்கும் போது, கேட்கும் போதும் மனமுடைந்து போவதாய் கூறும் Vihaan Peethambar, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments