இறக்கும் சில மணி நேரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதிகள்! மனம் உருகும் சம்பவம்

Report Print Printha in வாழ்க்கை

யுவொன்னே லாமஸ் என்ற பெண், தான் 11 வருடங்களாக காதலித்து வந்த ராவுல் ஹிநோஜோசா என்பவர் புற்றுநோயினால் பாதிகப்பட்டு சிலமணி நேரத்தில், இறந்து விடுவார் என்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துள்ளார்.

33 வயது நிரம்பிய ராவுல் ஹிநோஜோசாவுக்கு நாள்பட்ட லிம்ஃபோசைடிக் லுகேமியா உள்ளது.

இதனால் இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அமரில்லோ மருத்துவமனையில் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

பின் புற்றுநோயின் தாக்கம் தீவிரமாகி, ராவுல் ஹிநோஜோசா இறக்கும் தருவாயில் இருக்கும் போது, தன்னுடைய கடைசி ஆசையாக தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

இதை அறிந்த ராவுலின் காதலி லாமஸ் மருத்துவமனையில், மருத்துவ ஊழியர்களின் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்.

பின் ராவுலின் இந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த 36 மணி நேரத்திலேயே ராவுல் இறந்துவிட்டார்.

தன் காதலன் ராவுலின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவர் புன்னகையுடன் பூவுலகை அடைய வேண்டும் என்பதற்காக அவரை இறக்கும் தருணத்தில் திருமணம் செய்துக் கொண்டதாக லாமஸ் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments