என்னை பாடுபடுத்திய அந்த பெண்! யார் அவள்? ஏன்?

Report Print Raju Raju in வாழ்க்கை

பொதுவாக இந்த சமூகம் ஆணாதிக்கம் மிகுந்ததாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் கணவன் மனைவி விடயத்தில் இது இன்னும் ஒரு படி அதிகம் தான்!.

இதற்கு நேர்மாறாக ஒரு உண்மை சம்பவம் ஒரு ஆணுக்கு நடந்துள்ளதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.

எனக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆனது. நான் மனதார ஒரு பெண்ணை காதலித்து தான் திருமணம் செய்தேன். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக போய் கொண்டிருந்த என் வாழ்க்கையில் புயல் வீசியது.

என் மனைவி சின்ன விடயங்களுக்கு கூட என்னிடம் கோபப்பட்டாள். ஒரு சமயம் கை ஓங்கி என்னை அடித்தே விட்டாள். எதோ கோபத்தில் செய்தாள் என அதை பெரிதுபடுத்தவில்லை. பின்னர் கோபம் வந்தால் கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி என்னை அடிக்க தொடங்கினாள்.

நீங்கள் கேட்கலாம், ஏன் நான் திரும்ப அடிக்கவில்லை என! அவள் செய்வதையே நானும் செய்தால் பிரச்சனை முற்று பெறாது என நினைத்தே, நான் அமைதி காத்தேன்.

இது தொடர்கதையாகி போனதால் நிம்மதி இழந்து என் குடும்பத்தாரிடம் கூறினேன். அவர்கள் இதெல்லாம் சகஜம் என கூறி எனக்கு உதவ மறுத்தார்கள். பின்னர் சில வருடங்கள் பொருத்து பார்த்து விவாகரத்து விண்ணப்பித்தேன்.

அது எனக்கு விடுதலை அளித்தது!. இது நடந்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இன்னொரு திருமணம் செய்து தற்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்.

இந்த சமுதாயத்துக்கு சில விடயங்களை கூற நினைக்கிறேன். ஆண், பெண் எல்லோருக்கும் ஒரே மனது தான். ஆண் என்றால் அடக்குவான், பெண் என்றால் அடங்குவாள் என்ற மாய பிம்பம் மாற வேண்டும். 10ல் 3 ஆண் இப்படி கஷ்டபடுகிறான்.

ஆனால் வெளியில் சொல்வதில்லை. இந்த சமுதாயத்தின் கண்ணோட்டம் மாறினால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதே உண்மை!.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments