பணத்தினை சிக்கனம் செய்து சேமிப்பது எப்படி? சூப்பரான டிப்ஸ் இதோ!

Report Print Printha in வாழ்க்கை

ஆண்கள் என்னதான் கட்டுக்கடங்காமல் செலவு செய்தாலும், பெண்கள் அதனை கட்டுப்படுத்தி குடும்பத்தை சிக்கனமாக வழிநடத்த வேண்டும்.

எனவே அதை கடைபிடிக்க பெண்கள், மாத வருமானத்தை வைத்து, வீட்டின் செயல்பாடுகளை எவ்வாறு சிக்கனம் செய்வது என்று தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மாத வருமானத்தை வைத்து, தட்டுப்பாடுகள் இல்லாமல் குடும்பத்தின் செயல்பாடுகளை நடத்துவதற்கு, முன்கூட்டீயே பல திட்டங்களை வகுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் சம்பாதித்தாலும் கூட அதை சிக்கனமாக செலவிடுவதற்கு திட்டங்கள் போடுவது மனைவி மட்டும் தான்.

எனவே ஒரு குடும்பத்தில் சேமிப்புகள் மிகவும் அவசியம் என்பதால், மாத வருமானத்தை வைத்து, சிக்கனமாக செலவுகளை செய்து எப்படி சேமிப்பது என்பதற்கான வழிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

சிக்கன சேமிப்பின் சூப்பரான வழிகள்
  • மாதம் முடிவில் சம்பளப் பணம் வந்ததும் முதலில் அதை ஏ.டி.எம் களில் போட வேண்டும். பின் அந்த மாதத்திற்கான செலவுகளின் பட்டியலின் படி, தேவையான பணத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு மாதத்தின் சம்பளம் வரும் போது, ஒரு குறிப்பிட்ட ரூபாய் பணத்தை மட்டும் எடுக்க கூடாது. அந்த பணத்தை இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் போன்றவற்றில் சேமிக்க வேண்டும்.
  • குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இதர மற்ற வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.
  • சந்தைகளில் விற்கப்படுகின்ற சில சலுகை உள்ள பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனால் நமக்கு கிடைக்கும் அதிகமான நஷ்டங்கள் தவிர்க்கப்படும்.
  • சுற்றுலா செல்வதாக இருந்தால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டுவிட வேண்டும். இதனால் விமானம் மற்றும் ரயில் பயணச்சீட்டுகளின் செலவுகளை சேமிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments