உடல் எடையை கிண்டல் செய்த மக்கள்: 145 கிலோ எடையில் இருந்து 70 கிலோ குறைத்து சாதனை

Report Print Jubilee Jubilee in வாழ்க்கை

உடல் அமைப்பை வைத்து கிண்டல் செய்வதும், சீண்டுவதும் நம்மை சுற்றி நடந்து கொண்டே தான் இருக்கிறது.

சிலர் இவற்றை கண்டு துவண்டுவிட்டாலும், சிலர் இந்த சீண்டலுக்கும், கிண்டலுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று களத்தில் இறங்கி சாதித்துவிடுவர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் மும்பையை சேர்ந்த Mikhail Merchant. இவர் சிறுவயதில் மிகவும் குண்டாக இருப்பதால் பல வேதனைகளை அனுபவித்துள்ளார்.

ஆனால் இவருக்கு ஆறுதலாக இருந்தது அவரது அம்மா மட்டுமே. "நீ உயரத்தில் இருப்பதால் உன்னை கீழே தள்ள பலரும் பலவற்றை கூறுவார்கள். நீ உன்னுடைய இலக்கை நோக்கி போய் கொண்டே இரு" என்று ஊக்கம் அளிப்பார்.

நாளுக்கு நாள் அவரது எடையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதற்கிடையில் அவருக்கு ஆறுதலாக இருந்த அம்மாவும் இறந்து போக, உடைந்தே போய் விட்டார் Mikhail.

இந்நிலையில் அம்மாவை பெருமைப்படுத்தும் விதமாக ஏதாவது சாதித்தே ஆக வேண்டும் என்று களத்தில் இறங்கிய Mikhail, 3 வருடம் கடினமாக உடற்பயிற்சி செய்து தனது 145 கிலோ எடையை 70 ஆக குறைத்துள்ளார்.

இப்போது அவரை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் வாயடைத்து வியந்து பார்க்கீறார்கள்.

உடல் எடையை குறைத்ததன் மூலமாக ஹிரோவாக மாறிய Mikhail, இப்போது மொடல் உலகில் காலடி பதித்திருக்கிறார். அடுத்த மாதம் தனது முதல் மொடலிங் வேலையை தொடங்க உள்ளார்.

இந்த மாற்றங்களை பார்க்க வேண்டிய என்னுடைய அம்மா இப்போது என்னுடன் இல்லாவிட்டாலும், அவரை பெருமைப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன் என்கிறார் கலக்கத்தோடு..

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments