தற்கொலை செய்துகொள்வதற்கான மிக முக்கிய காரணங்கள்!

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை

இந்த உலகில் மானுடனாய் பிறந்துவிட்டால், அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எந்த அளவுக்கு உரிமை உண்டோ, அதே போன்று தாங்கள் விரும்பிய நேரத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.

இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பங்கள் மட்டுமே நிறைந்ததுதான் வாழ்க்கை என்றால் அதில் சுவாரசியம் இருக்காது.

நாம் அன்றாடம் சமைத்து சாப்பிடும் உணவில் கூட காரம், உப்பு சரியான அளவில் இல்லையென்றால் அதனை உதாசீனப்படுத்தும் நீங்கள், இன்பம் மட்டுமே நிறைந்த ஒரு சேர வாழ்க்கையை விரும்புவது ஏன்?

வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தானே தவிர, கோழையாக வாழ்க்கை முடித்துக்கொள்வதற்காக அல்ல.

வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ள துணிந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் நம்முடைய மனதுதான். ஒரு நிமிடம் யோசித்து தற்கொலை முடிவை எடுக்கும் நீங்கள், அந்த ஒரு நிமிடத்தை, ஏன் வாழ்வில் வெற்றி பெறும் நிமிடமாக மாற்றக்கூடாது.

தற்கொலை செய்வதற்கு முழுக்க முழுக்கமே நாம் மற்றுமே காரணம் தானே தவிர, இதில் மற்றவர்கள் காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் நம்மை பிறர் தற்கொலைக்கு தூண்டினாலும், அதனை தவிடுபொடியாக்கி வாழ்வில் பெறும் மனப்பக்குவம் நமக்கும் இருக்க வேண்டும்.

தற்கொலை செய்துகொள்வதற்கு கவலை, மன அழுத்தம், காதல் தோல்வி என பல காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணங்கள் பற்றி பார்ப்போம்,

மன அழுத்தம்

அதிக அளவு தற்கொலை நிகழ்வதற்கு முதல் காரணம் மன அழுத்தம். நம்மை சுற்றி பல்வேறு காரணிகள் நம்மை அழுத்தும்போது, அதனை செய்ய முடியாமலும், சமாளிக்கமுடியாமலும் திணறுகிறோம்.

ஒரு கட்டத்தில் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நாம் தகுதி இல்லாதவர்கள். நம்முடைய பெற்றோர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது. இந்த எண்ணமே, நாம் நமது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி இந்த பூமிக்கும் பாரமாக இருக்கிறோம். இப்படி மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் வாழ்க்கை நமக்கு தேவையில்லை என கருதி தற்கொலை என்ற முடிவை தேடிக்கொள்கின்றனர்.

நம்பிக்கை இழத்தல்

இந்த உலகில் மற்றவர்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கையை விட, நாம் நம்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். எந்த ஒரு செயலையும் செய்ய தொடங்கும்முன் அதனை நம்பிக்கையோடு செய்யத்தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

ஆனால், அதைவிட்டு இன்றைய மனிதர்கள் கடவுளின் மீதும் மற்றவர்கள் மீதும் நம்பிக்கையை வைத்து செயல்படத்தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் இங்கு நம்பிக்கையற்ற நிலை ஏற்படும் போது, நம்மை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள்.

நாம் ஒரு கோழை. நம்மால் எந்தவொரு செயலையும் செய்யமுடியாது என நம்பிக்கை இழந்து இறுதியில் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறார்கள்,

இழப்பு

பல்வேறு தோல்விகளை சந்தித்த ஒரு மனிதனால் மட்டுமே வெற்றிக்கனியை சுவைக்க முடியும். வெற்றியை மட்டுமே உங்கள் வாழ்வில் சந்தித்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் ள் வாழ்வில் சரியான பாதையில் நீங்கள் பயணிக்கவில்லை என்று அர்த்தம்.

ஏனெனில் இந்த தோல்வி மட்டுமே உங்களுக்கு வாழ்வில் பல்வேறு அனுபவங்களை கற்றுத்தரும். ஆனால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம். பொருளாதார இழப்பு, காதல் தோல்வி, வாழ்க்கையில் தோல்வி போன்ற காரணங்களை முன்வைத்து தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.

பயம்

இந்த உலகத்தில் பயம் என்பது அர்த்தமற்ற வார்த்தை. சொல்லப்போனால் மனிதர்கள் தேவையில்லாமல் உருவாக்கிகொள்ளும் ஒன்றுதான் பயம். எங்கே நமக்கு பிடித்தமானவர்களை இழந்துவிடுமோ? நம்மை மற்றவர்கள் அவமானப்படுத்துவார்களோ? என்று நடக்காதவற்றை நாமாக யோசித்துக்கொண்டிருக்கும்போது பயம் நம்மை ஆட்கொள்கிறது. அளவுக்கு அதிகமான பயம் அவர்களை ஆட்கொள்ளும் போது இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறோம்.

வாழ்க்கையில் வருத்தம்

வாழ்க்கையில் வருத்தம் என்பது ஒரு பாதி மட்டுமே. எனவே இதனை பார்ஷல் செய்து ஒரு ஓரமாக வைத்துவிடுங்கள். இந்த உலகில் வருத்தங்கள் இல்லாத ஒரு மனிதனை பார்க்க இயலாது. அப்படி வருத்தங்கள் உள்ள அனைவருமே தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்றால், இந்த உலகம் மனிதர்களற்ற மாயான பூமியாத்தான் இருக்கும்.

வாழ்வில் வருத்தங்கள் ஏற்படுவதற்கு ஒரு பாதை இருந்தால், அதற்கு தீர்வு கண்டுபிடிப்பதற்கும் மற்றொரு பாதை இருக்கும். எனவே ஒரு பாதையை மட்டுமே எதிர்பார்த்து காத்திருந்து உங்கள் வாழ்க்கை கதவை மூடிக்கொள்ளாதீர்கள்.

வேலைவாய்ப்பின்மை

இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் ஒன்றுதான் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை. அப்படி வேலை இல்லாத கட்டத்தில், உங்களுக்கான வேலையை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்.

மேலே வானம், கீழே பூமி இடையில் மனிதர்களாய் பார்த்து கட்டியது தான் வீடுகள். அப்படி நாம் வாழ்வதற்கு தேவையான ஒரு வீட்டினை கட்டிய நாம், அந்த வாழ்வினை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஒரு தொழிலையும் நீங்களாகவே முன்வந்து செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

அதனை விட்டு, வேலை கிடைக்கவில்லை, அதனால் நாம் எப்படி சாப்பிடுவது , எப்படி வாழ்வது என்று கவலைகொண்டு தற்கொலை செய்யாதீர்கள்.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments