பெண்களுக்கு இந்த குணங்கள் கொண்ட ஆண்களை பிடிக்கவே பிடிக்காதாம்! நீங்க எப்படி?

Report Print Raju Raju in வாழ்க்கை முறை

பெண்களுக்கு சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பதை பற்றி பார்க்கலாம்.

  • பெண்கள் கெட்ட வார்த்தையில் திட்டும் குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.
  • நான் ஒரு ஆண் என்ற கர்வத்துடன் இருக்கும் ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.
  • பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்கவே பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான்.
  • சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.
  • உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.
  • பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும். ஆனால் அத்தகைய ரொமான்ஸானது வற்புறுத்தி வரக்கூடாது என்பது முக்கியமாகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்