காலையில் எழுந்ததும் இதையெல்லாம் செஞ்சிங்கனா கண்டிப்பா உடம்பில் மாற்றம் வரும்!

Report Print Nalini in வாழ்க்கை முறை

ஒபிசிட்டி அல்லது உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டன.

மேலும் இது ஒரு பெரும் உடல்நல கவலையாக மாற்றியுள்ளது. ஒபிசிட்டியை தடுப்பதனால் நாம் பல ஆபத்தான நோய்களிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

காலை எழுந்தவுடன் இதையெல்லாம் பின்பற்றினால் நடக்கும் அற்புதத்தைப் பற்றி பார்ப்போம்

  • தினமும் காலை எழுந்தவுடன் உடல் எடை குறைக்க சில நல்ல பழக்கங்களை பின்பற்றினாலே போதும். அதிக நேரம் தூங்குவதால் நம் உடல் எடை கூடிவிடும். தினமும் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூக்கம் என்பதே ஆரோக்கியமானது.
  • வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் எப்போதும் உங்கள் காலை உணவை சாப்பிட வேண்டும். நீங்கள் காலை உணவை தவிர்த்தால், உங்கள் எடை இழப்பு இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி காண முடியாது.
  • ஆரோக்கியமற்ற உணவு உங்களுக்கு ஒரு மந்தமான உணர்வை ஏற்படுத்துவதோடு உடல் எடை மற்றும் கிரோனிக் டிசீஸ் ஆபத்தை அதிகரித்து விடும்.
  • ஆரோக்கியமான காலை உணவுகளில் சில நட்ஸ், பழங்கள், கிரீன் டீ, கீன்வா, ஸ்மூத்திஸ், தூய தயிர் ஆகியவை அடங்கும். பேன்கேக்ஸ், டோனட்ஸ், பாஸ்டரிஸ், பேக்கேஜட் ஜூஸ், இனிப்பு சார்ந்த உணவு ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது.
  • காலை எழுந்ந்தவுடன் வீட்டிற்கு உள்ளேயே இல்லாமல் வெளியில் சென்று காலை வெயிலை ரசிக்க வேண்டும்.
  • காலை வெயில் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவி செய்யும்.
  • நீங்கள் காலை எழுந்தவுடன் காபீ அல்லது டீ குடிக்கும் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது லெமன் வாட்டர் குடிக்க வேண்டும்.
  • தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் சரியான வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்தை சமநிலைப்படுத்த உதவி செய்கிறது.
  • இது செரிமானத்திற்கும் உதவும். மேலும், தண்ணீர் விரைவாக வயிற்றை நிரப்புவதால், காலை உணவு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும். காலையில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க ஓர் நல்ல வழியாகும்.
  • உங்கள் உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு, உங்கள் எடையைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். தினமும் காலை தங்கள் எடையை கண்காணிப்பது மூலம் நம்மால் எளிதில் எடையை குறைக்க முடியும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்