கொரனா வைரஸிலிலிருந்து தப்பித்துக் கொள்ள வீட்டை சுத்தமாக வைக்க ஆலோசனைகள்

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு வரும் வைரஸ் கொரனா வைரஸ். மனித உயிர்களை நாளுக்கு நாள் பழி வாங்கிக்கொண்டு, பறித்துக் கொண்டு வருகிறது.

வைரஸிலிருந்து நம் உடம்பை மட்டும் பத்திரமாக சுத்தம்செய்தால் போதாது… வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் சுத்தமாக இருந்து வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்தால் அது உங்களுக்கு ஒரு பலனையும் கொடுக்காது.

கொரானா வைரஸிலிருந்து தப்பித்துக் கொள்ள வீட்டை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கவனியுங்கள்:

சமையல் திண்டையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்

வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் நல்ல சோப்பு போட்டு கழுவுங்கள்.

அறையை ஒழுங்குபடுத்துங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள்.

படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள்.

சுவர் முழுவதையும் நன்றாகக் கழுவுங்கள்.

தோட்டம், முற்றம், கார் ஷெட் கூட்டி சுத்தம் செய்யுங்கள்.

வேண்டாத பொருட்களை கழித்துவிடுங்கள்.

ஃபிரிட்ஜை காலி செய்துவிட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்

ஷெல்ஃபுகளையும், டிராயர்களையும் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள்.

தேவையற்ற அல்லது பழைய மருந்து, மாத்திரைகள் எல்லாவற்றையும் வெளியே தூக்கிப்போடுங்கள்.

லைட், ஃபேன், கூண்டுவிளக்குகள் ஆகியவற்றையெல்லாம் சுத்தம் செய்யுங்கள்.

ஸ்கிரீன்களைத் துவையுங்கள்.

கதவுகளையும் ஜன்னல்களையும் கழுவுங்கள்

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்