அன்று உச்சத்தில் இருந்த கவர்ச்சி மொடல்: இன்று நடுத்தெருவில் நிற்கும் சோக கதை!

Report Print Kavitha in வாழ்க்கை முறை
285Shares

சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில், கோடீஸ்வரியாக இருந்த கேடி பிரைஸ் (Katie Price) பணக் கஷ்டத்தாலும், தவறான நிதி மேலாண்மையாலும், இன்று வாங்கிய கடனைக் கூட கட்ட முடியாமல் நடுத் தெருவில் நிற்கும் நிலை வந்திருக்கின்றார்.

கேடி பிரைஸ் (Katie Price) புகழ் பெற்ற செலிபிரிட்டிகளுக்காக நடந்த பிக் பிரதர் 15-வது சீசன் வெற்றியாளராகவும் “ப்ளே பாய்” பத்திரிகையில் மொடல் அழகியாக பணியால் உலகமே ஜொள்ளுவிடத் தொடங்கியது.

இவர் 19 வயதாக இருக்கும் போதே மார்பக அறுவை சிகிச்சை எல்லாம் செய்து கொண்டார்.

அதுமட்டுமின்றி ஒரு வார காலத்தில் உணவுக்காக மட்டும் நம் கேடி பிரஸ் சுமார் 800 முதல் 1000 பவுண்ட் ஸ்டெர்லிங் செலவழிப்பாராம். 9 இந்திய மதிப்பில் சுமாராக 70,000 - 90,000 ரூபாய்).

1996-ல் இருந்து இங்கிலாந்தில் மாடலிங், டிவி சேனல் நிகழ்ச்சிகள், விளம்பரம் என வலம் வந்து கொண்டிருந்தார்.

moosegazette

மீடியாவுக்குள் வந்த சில ஆண்டுகளிலேயே “தி சன் மற்றும் தி டெய்லி ஸ்டார்” போன்ற பத்திரிகைகளுக்கு செய்த கவர்ச்சிகரமான மாடலிங் பணியால் அனைவரையும் கவர்ந்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் யூரோவிசன் பாட்டுப் போட்டியில் பங்கெடுத்து இரண்டாவது இடம் பிடித்தார்.

அதன் பிறகு டிவி சேனல் ஷோக்கள் தயாரிப்பு, பிக் பாஸ் என புகழும் பணமும் பெருகத் தொடங்கியது.

அதுமட்டுமின்றி உடல் நலம் சார்ந்த நியூட்ரீஷியன் பொருட்கள், ஆரோக்கிய பானங்கள் என வியாபாரத்தில் களம் இறங்கினார்.

ஆனால் பிரிட்டீஷ் டயட் சங்கம், கேடி பிரைஸின் விலை அதிகம் உள்ள டயட்டை , பின்பற்ற தகுதியற்ற டயட் முறைகளில் ஒன்று எனவும் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இது நல்லதல்ல என பகிரங்கமாக அறிவித்தது.

இதன் பின் இவர் புத்தகங்கள் எழுத தொடங்கினார். எழுதத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே, விற்பனை மகாராணியாக முடி சூடிக் கொண்டார்.

2000 - 2009 வரையான காலங்களில், அதிகம் விற்பனை ஆகும் எழுத்தாளர்களில் ஒருவராக வலம் வந்தார்.

இவரின் “Being Jordan” என்கிற புத்தகம் ஒரே வருடத்தில் 97,000 புத்தகங்களும் இதுவரை 1 மில்லியன் புத்தகங்களும் விற்று இருக்கின்றன.

ITV

அதன் பிறகு “ Free to love again” என ஒரு பாட்டு, “ஸ்டன்னிங்”என்கிற பெயரில் வாசனை திரவியங்கள்,“ Equestrian” என்கிற பெயரில் ஆடை வியாபாரம் என ஒரு நீண்ட பயணம் செய்தார்.

புகழ் வளர்ந்தது, பணம் பெருகியது. சுமார் 45 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 410 கோடி ரூபாய்) என்கிற உச்சத்தைத் தொடும் அளவுக்கு வளர்ந்தார்.

இருப்பினும் இவருக்கு வந்த பணத்தை சரியாக நிர்வகித்துக் கொள்ள முடியவில்லை.

அதோடு சுமார் 1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்) ஆடம்பர திருமணம், பின் விவாகரத்தும் செய்தார்.

மேலும் முன்னாள் கணவரை தவறாக பொது வெளியில் பேசியதால் கேடி பிரைஸின் முன்னாள் கணவர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தார், கேடி வழக்கில் தோன்றி நஷ்ட ஈடு கொடுத்தார்.

irishexaminer

அதே போல, கேடி பிரைஸ் தன் மேலாளராக இருந்த க்ளேர் பவலை தவறாக பேசியும் நீதிமன்றப் படியேறி நஷ்ட ஈடு கொடுத்தார்.

வியாபாரங்களைச் செய்ய சில இடங்களில் இருந்து கடன் வாங்கி கடனை ஒழுங்காகச் செலுத்த ஒப்பந்தம் எல்லாம் கூட போட்டு ஒப்பந்தத்தின் படி, 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங் பணத்தைச் செலுத்தவில்லை.

சொன்ன நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்தாத கேடி பிரைஸை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் (Bankrupt) என அறிவித்துவிட்டது நீதிமன்றம்.

இந்நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர் என அறிவித்ததால், தன் புகழை இழந்து சேர்த்து வைத்திருந்த 410 கோடி ரூபாய் பணத்தையும் இழந்து கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்.

மேலும் அதோடு கேடி பிரஸ் தொடர்ந்து தான் செலுத்த வேண்டிய கடன் தொகைகளைக் கட்டவில்லை என்றால், தன்னுடைய சொகுசு பங்களாவான மிக்கி மேன்ஷனைக் கூட கடன் கொடுத்தவர்கள் பறிமுதல் செய்து கொள்ளும் நிலை வரலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

'பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியமில்லை, அதை முறையாக பாதுகாப்பதும், சரியான திட்டமிடலும் அவசியம்' என ப்ளே பாய் மொடல் அழகி கேடி பிரைஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்