பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான ஆலியா பட் ஃபிட்டாக இருக்க இதுதான் காரணமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

நடிகை ஆலியா பட் மிக குறுகிய காலத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய ஃபிட்னஸ் ரகசியங்கள் மற்றும் டையட் பற்றிய ரகசியங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து கொள்வதுண்டு.

அந்தவகையில் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் டையட் டிப்ஸ் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு பிடித்த விருப்பமான இரண்டு உணவுகளை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில் பீட்ரூட் சாலட் மற்று சியா புட்டிங் விரும்பி சாப்பிடும் உணவு என்று கூறியுள்ளார்.

google

தயிர் ,கொஞ்சம் எண்ணெய், கருவேப்பிலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து தாளித்து பீட்ரூட்டில் சேர்த்து சாப்பிடுவராம்.

இது தனக்கு மிகவும் பிடித்த உணவு என்றும் பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஷூட்டிங் ஸ்பார்ட் சென்றாலும் இந்த பீட்ரூட் சாலடைதான் கொண்டு செல்வதாகவும் கூறுகின்றார்.

அடுத்ததாக சியா புட்டிங் ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் அதில் நார்ச்சத்து, புரோட்டீன், ஆண்டி ஆக்ஸிடண்ட், மெக்னீசியம் இப்படி பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

bollywoodlife

சியா விதைகளை வறுத்துக்கொண்டு அதில் தேங்காய் பால், புரோட்டீன் பவுடர் மற்றும் தேன் ஆகியவை கலந்து ஊற வைத்து இதை காலை அல்லது மாலை உணவாக சாப்பிடுவாராம்.

மேலும் இவை தவிர தினசரி உடற்பயிற்சியும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

modi2.com

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்