உங்கள் பிறந்த எண்ணின் படி இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா? உடனே இதை படிங்க

Report Print Kavitha in வாழ்க்கை முறை
807Shares
எண் 1

பிறந்த எண் 1 ஆக உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு கடினமாக உழைத்த ஆண்டாகவும், விரக்தி நிறைந்த ஆண்டாகவும் இருக்கும்.

ஆனால் ஆண்டின் இறுதியான இந்த மாதத்தில் அதற்கான பலனை நீங்கள் அடையலாம். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அடுத்த படி இந்த மாதத்தில் உங்களுக்கு ஏற்படும்.

உங்களின் திடமான மனநிலையும், கடின உழைப்பும் இந்த ஆண்டுக்கான நல்ல முடிவையும், அடுத்த ஆண்டுக்கான சிறந்த தொடக்கத்தையும் உங்களுக்கு வழங்கும்.

எண் 2

பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக உள்ளவர்களுக்கு டிசம்பர் மாதம் நல்ல மாதமாக இருக்கப்போகிறது.

அலுவலகத்தில் போனஸ் அல்லது சம்பள உயர்வு குறித்த நல்ல செய்திகள் உங்களுக்காக காத்திருக்கும். உறவுகளை பொறுத்தவரையில் இந்த மாதம் அனைவரும் உங்களை விரும்புவார்கள்.

உங்களின் யோசனைகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றவும், முன்னேறவும் இது சரியான சமயம்.

எண் 3

பிறந்த எண் 3 ஆக உள்ளவர்கள் பயணம் மேற்கொள்ள இது சிறந்த காலமாக இருக்கும். உங்களுக்கு பிடித்தவர்களுடன் பயணம் மேற்கொள்வது உங்களின் வாழ்க்கைக்கு புதிய பரிணாமத்தைக் கொடுக்கும்.

உங்களின் நேர்மை, உத்வேகம் , செயல்திறன் குறித்து பொதுவெளியில்கேள்விகள் எழலாம். முடிந்தவரை உங்கள் ஓய்வு நேரத்தை தியானத்தில் செலவழியுங்கள். இந்த மாதம் உங்களின் மகிழ்ச்சிக்கான மாதமாகும்.

எண் 4

பிறந்த எண் 4 ஆக உள்ளவர்களுக்கு இந்த மாதத்தில் பெரிய முன்னேற்றம் காத்திருக்கும். . நீங்கள் இந்த மாதத்தை புதுப்பித்த ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் தொடங்குவீர்கள், இது அடுத்த வருடமும் தொடரும்.

இந்த நேர்மறையான ஆற்றலை உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் செலுத்துங்கள். நீங்கள் தனிமையான ஆளாக இருந்தால் உங்களின் உள்ளுணர்வுகளை எழுப்பக்கூடிய ஒருவரை சந்திக்க வாய்ப்புள்ளது.

உங்களைப் பற்றியும், உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் பல முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

எண் 5

எண் 5-ஐ பிறந்த எண்ணாக கொண்டவர்களுக்கு இந்த மாதம் அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்திறன் நிறைந்ததாக இருக்கும்.

உங்களின் காயங்கள் ஆறக்கூடிய காலம் இது. உங்கள் இதயம் சொல்வதை பின்பற்றி நடக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்பானவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டிய காலமிது.

வேலையில் நல்லிணக்கத்தை வைத்திருக்க உங்கள் இராஜதந்திரம் தேவைப்படலாம். உங்கள் எல்லைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டியது நல்லது.

எண் 6

பிறந்த எண்ணை 6 ஆக கொண்டவர்கள் மெதுவாகவும், ஓய்வாகவும் செயல்பட வேண்டிய நேரமிது. ஏனெனில் உங்களின் அடுத்த வருடம் அதிக ஆற்றலுடனும், அதிக சுழற்சிகளுடனும், புதிய தொடக்கங்களுடனும் வரப்போகிறது.

அவற்றை ஏற்றுக்கொள்ள உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். எனவே உங்களுக்கு பொருந்தாத எல்லாவற்றையும், எந்தவொரு மன அழுத்த சூழ்நிலையையும் விட்டுவிட்டு, உங்களை சீரானதாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயலுங்கள். வரும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.

எண் 7

பிறந்த எண்ணை 7 ஆக கொண்டவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த வருடத்திற்கான நோக்கங்களையும், குறிக்கோள்களையும் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

சிலசமயம் உங்களின் சொந்த யோசனைகளே உங்களை குழப்பமடைய செய்யக்கூடும். உங்களை மனதை தெளிவாக வைத்துக்கொள்ள உங்களுக்கு நேர்மறை ஆற்றலை வழங்கும் விஷயம் என்னவென்பதை கண்டறிய வேண்டும்.

உங்கள் குறிக்கோள்களுடன் நீங்கள் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் தேடுவதை உங்கள் குறிக்கோள்கள் எதிர்கொண்டால், நீங்கள் செழித்து வளர வாய்ப்புள்ளது.

எண் 8

பிறந்த எண்ணை 8 ஆக கொண்டவர்கள் மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு பயணத்திற்கு நீங்கள் அழைக்கப்படலாம்.

உங்களின் குறிக்கோள்களை நிர்ணயித்து அதை நிறைவேற்றுவதற்கான புதிய நபர்களைச் சந்திக்க இந்த மாதத்தில் பயணத்தை திட்டமிடுவது நல்லது.

இந்த மாதத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பயணமும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த தொடக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.

எண் 9

இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கை, குடும்பம், தொழில் மற்றும் உறவுகள் போன்ற அனைத்து விஷயங்களிலும் உங்களின் அதிக கவனம் தேவைப்படும்.

விடுமுறை நாட்களில் குடும்பத்தை ஒன்றாகக் கொண்டுவருவது மிகவும் பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியானத் தருணமாக இருக்கும். இது அனைத்து அம்சங்களிலும் ஆண்டின் மிகவும் பலனளிக்கும் மாதமாக இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்