இந்த திகதியில் மட்டும் திருமணம் பண்ணிடாதீங்க....அடிக்கடி வாக்குவாதங்களும் பிரச்னைகளும் ஏற்படுமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

உங்களின் திருமண தேதியை மொத்தமாக கூட்டி இறுதியில் வரும் ஒற்றை இலக்க எண்தான் உங்கள் திருமண எண் ஆகும்.

அந்த எண்ணை பொறுத்துதான் உங்கள் திருமண வாழ்க்கை இருக்கும்.

அந்தவகையில் உங்கள் திருமண எண் உங்களின் திருமண வாழ்க்கையை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பார்ப்போம்.

எண் 1

உங்களின் திருமண எண் 1 ஆக இருந்தால் உங்களின் திருமண வாழ்க்கை பிணைப்பு நிறைந்ததாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் காதல் கதைக்கு முடிவே இருக்காது.

திருமண எண்ணாக 1 இருப்பது நீங்கள் அன்பும், பாசமும் நிறைந்த ஜோடி என்பதை உறுதி செய்யும்.

இது திருமணம் குறித்து உங்களுக்கு இருக்கும் முதிர்ச்சியையும், உங்களுக்குள் எழும் வாக்குவாதங்களை நீங்கள் கண்ணியமான முறையில் தீர்த்துக் கொள்வீர்கள் என்பதற்கான அடையாளமும் ஆகும்.

புரிந்து கொண்டு நடப்பதும், விட்டு கொடுத்து செல்வதும்தான் உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான சாவி ஆகும்.

எண் 2

உங்களின் திருமண தேதியை 2 ஆக நீங்கள் தேர்வு செய்தால் நீங்கள் மிகவும் ரகசியமான, தனிப்பட்ட திருமணத்தை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த ஜோடிகளில் ஒருவர் முதிர்ச்சி அற்றவராக இருப்பார், பக்குவமும், முதிர்ச்சியும்தான் மகிழ்ச்சியான திருமணத்திற்கு அடிப்படையாகும்.

இவர்களின் திருமண வாழ்க்கை ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும்.

எண் 3

பொருளாதாரரீதியான பாதுகாப்பை பெற திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த எண்ணை தாராளமாக தேர்வு செய்யலாம்.

ஏனெனில் இந்த நாளில் திருமணம் செய்வது உங்கள் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தும்.

இவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இவர்கள் தங்களின் திருமணம் அனைத்தையும் விட சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்த போக வேண்டிய சூழல் இவர்கள் வாழ்க்கையில் நிலவும்.

எண் 4

திருமணம் எதைக் கொண்டுவருகிறது என்பதற்கான அனைத்து பொறுப்புகளையும் நீங்கள் இருவரும் கலந்துரையாடி, ஒப்புக்கொண்டிருந்தால், திருமண வாழ்க்கையின் நன்மை தீமைகளை கவனமாக எடைபோட்டிருந்தால், ஒருவேளை நீங்கள் திருமணம் செய்ய 4 ஆம் எண்ணை தேர்வு செய்திருப்பீர்கள்.

இந்த தேதியில் திருமணம் செய்பவர்கள் மரணம் வரை பிரியாமல் இருப்பார்கள்.

இவர்களில் ஒருவரின் இலட்சியம் நிறைவேறுவதற்காக மற்றொருவர் பாடுபடுவார்கள்.

எண் 5

இந்த எண்ணில் திருமணம் செய்து கொண்டவர்கள் அல்லது இந்த எண்ணை திருமண நாளாக தேர்ந்தேடுத்தவர்கள் தங்களுக்குள் இருக்கும் தொடர்ப எப்பொழுதும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.

இவர்கள் திருமணமும், திருமண வாழ்க்கையும் சுறுசுறுப்பு நிறைந்ததாக இருக்கும்.

இவர்கள் இருவரும் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் அடிக்கடி வாக்குவாதங்களும், சில பிரச்சினைகளும் எழலாம்.

எண் 6

இந்த நாளில் திருமணம் செய்து கொள்பவர்கள் குருபகவானின் பூரண ஆசீர்வாதத்தை பெறுவார்கள்.

இதனால் இவர்கள் வாழ்க்கையில் அன்பு, காதல், அமைதி, செல்வம் என அனைத்தும் நிறைந்திருக்கும்.

இதனால் இவர்கள் வாழ்க்கையில் பிரச்னைகளே எழாது என்று அர்த்தமல்ல, பொறுப்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த பிரச்னைகள் இவர்களுக்குள் அடிக்கடி எழலாம்.

தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் இவர்கள் தீரஆலோசித்து தங்களுக்கும் விவாதித்தே எடுப்பார்கள்,

எண் 7

உங்களின் திருமண தேதி 7 ஆக இருந்தால் பல சவால்களை சந்திக்க தயாராகிக் கொள்ளுங்கள்.

மாற்றங்கள், மனக்கசப்புகள், வாக்குவாதங்கள் என பல பிரச்னைகள் உங்கள் வாழ்க்கையில் எழலாம்.

தம்பதிகளுக்குள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களுக்குள்ளும் சில மனக்கசப்புகள் எழும். இந்த பிரச்னைகள் வாழ்க்கை முழுவதும் தொடரும்.

எண் 8

உங்களின் திருமண எண் 8 ஆக இருந்தால் நீங்கள் உங்கள் துணையிடம் அனைத்து விஷயங்களிலும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

குறிப்பாக தாம்பத்திய விஷயத்தில் நீங்கள் அதிகம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும்.

இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும்.

இவர்களுக்குள் ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டால் அதற்கு பிறகு இவர்களை பிரிப்பது என்பது நடக்காத காரியம் அவர்களே நினைத்தாலும் அது முடியாது.

எண் 9

முடிந்த வரை இந்த எண்ணை திருமண நாளாக தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.

ஏனெனில் இந்த நாளில் செய்யப்படும் திருமணம் தோல்வியில் முடிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

நம்பிக்கை மட்டும் இல்லையென்றால் இவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

ஒருவேளை இவர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும் விபத்துகளால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்