உங்க பெயர் ' V ' என்ற எழுத்தில் தொடங்குகின்றதா? நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

அன்பும், விசுவாசமும் கொண்ட V எழுத்து நபர்கள் உலகின் உண்மையான மனிதர்களில் ஒருவர் ஆவர்.

V என்றால் வெற்றி சுருக்கமாக சொல்லலாம். ஏனெனில் இவர்கள் தொட்டது துலங்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் சரியான பாதையில் தெளிவாக தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள்.

இவர்களின் நிறைகள் மற்றும் குறைகள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

நேர்மை

இவர்களின் ஆகச்சிறந்த குணம் என்றால் அது நேர்மைதான்.

இவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பவர்கள்.

அது நம்புபவர்களுக்காக இருந்தாலும் சரி, நம்பாதவர்களுக்காக இருந்தாலும் சரி அதுதான் இவர்களின் முக்கியமான பலவீனமும் கூட.

தவறான நபர்களுக்கு இவர்கள் காட்டும் விசுவாசம் இவர்களை ஆபத்தில் தள்ளும் என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.

வசீகரமானவர்கள்

இவர்கள் அதிக நேரத்தை தனிமையில் இருப்பதை செலவழிப்பார்கள், அதற்கு இவர்கள் கூச்ச சுபாவமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதேசமயம் இவர்கள் வசீகரமானவர்கள் என்பதை மறுக்க முடியாது.

இவர்கள் ஒதுங்கி போக நினைத்தாலும் இவர்களுடன் நேரம் செலவழிப்பதை அனைவரும் விரும்புவார்கள்.

இந்த அதீத ஈர்ப்பு சிலசமயம் இவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

அக்கறையானவர்கள்

மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துபவர்களில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

இவர்களுடன் பழகிப் பார்த்தால் அது உங்களுக்கே புரியும். ஆனால் அதனை உணர நீங்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த மாட்டார்கள். இவர்களுக்கு நெருக்கமானவர்களாக மாறுவது மிகவும் எளிதான செயல்தான்.

தைரியமானவர்கள்

இவர்கள் எப்பொழுதும் சவாலை ஏற்க தயாராக இருப்பார்கள். சவாலை ஏற்றுக்கொள்வதும், அதனை ஜெயிப்பதும் இவர்களுக்கு மிகவும் பிடித்ததாகும்.

எந்த சூழ்நிலையிலும் இவர்கள் தனது தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இழக்க மாட்டார்கள்.

உணர்வுகளை மறைப்பவர்கள்

இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களின் உணர்வுகளை மறைக்கும் வினோத பழக்கம் கொண்டவர்கள்.

இதனால் அவர்கள் அடிக்கடி மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

ஆனால் தங்களின் பிரச்சினைகளை தானே சரிசெய்து கொள்ளும் திறமை படைத்தவர்கள் இவர்கள்.

ஆழமாக சிந்திப்பவர்கள்

இவர்கள் எப்பொழுதும் ஆழமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னால் இவர்கள் ஆயிரம் முறை யோசிப்பவர்களாக இருப்பார்கள்.

ஏனெனில் இவர்களின் இவர்கள் எடுக்கும் முடிவு இவர்கள் மட்டுமின்றி இவர்களை சார்ந்தவர்களையும் பாதிப்பதாக இருக்கும்.

தொழில்

பேசிய மற்றவர்களை கவரும் இவர்களுக்கு ஏற்ற தொழில் அரசியலும், சினிமாவும்தான்.

இவர்கள் சிறந்த பேச்சாளராகவும், நடிகராகவும் வருவார்கள்.

இவற்றை தவிர்த்து இவர்களுக்கு சொந்தத் தொழில் சிறப்பாக வரும். முதலாளியாக இருக்க அனைத்து தகுதியும் இவர்களிடம் இருக்கும்.

ரகசியமானவர்கள்

இவர்களின் தனிமையும், ஆழமான சிந்தனையும் இவர்களை பெரும்பாலும் ரகசியமானவர்களாக மாற்றும்.

இவர்கள் எப்பொழுது என்ன செய்வார்கள், யாரிடம் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது.

அதுவே இவர்களின் முக்கிய பலவீனமாக இருக்கிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்