இந்த நான்கு ராசிக்காரர்களும் செம்ம அதிர்ஷ்டசாலிகளாம்! உலகம் முழுவதையும் சுற்றி பார்க்க வாய்ப்பை பெற்றவர்களாம்...

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பர்கள்.

அந்தவகையில் எந்த ராசிக்காரர்கள் உலகம் முழுவதையும் சுற்றி பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்களாக இருப்பார்கள் என பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் சாகசங்களை விரும்புபவர்களாக இருப்பார்கள், பயணம் செய்வதை விட பெரிய சாகசம் வேறு என்ன இருந்துவிட போகிறது.

வெளியே செல்வதன் மூலம் இவர்கள் புதிய கலாச்சாரங்கள், உடைகள், வாழ்க்கை முறைகளுக்கு இவர்கள் தங்கள் மனதை திறக்கிறார்கள்.

எந்தவித யோசனையுமின்றி புதிய சூழ்நிலையில் குதிப்பதற்கு தனி தைரியம் வேண்டும் அது இவர்களிடம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

வாழ்க்கை தனக்கு அளிக்கும் அதனை அனுபவங்களையும் ஏற்றுக்கொள்ள இவர்கள் தயாராக இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் அங்கு நண்பர்களை உருவாக்கி கொள்கிறார்கள். இதற்கு காரணம் அனைத்து மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அவர்களின் குணம்தான்.

இவர்கள் மிகவும் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள் அது தனக்கு வீட்டை விட்டு வெளியே சென்றால்தான் கிடைக்கும் என்று நம்புபவர்கள் இவர்கள்.

சவால்களை ஏற்றுக்கொண்டு அதனை சாதிப்பதில் இவர்களுக்கு அலாதி பிரியம் இருக்கும். ஒருபோதும் தங்கள் வீட்டில் உதவிக்காக சென்று நிற்பதை இவர்கள் விரும்பமாட்டார்கள்.

சிம்மம்

இவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்வரை இவர்களுக்கான அடையாளத்தை பெறமுடியாது. அவர்களுக்கு தெரிந்தவர்கள் அவர்களை சுற்றி இருக்கும்போது அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்குவது அவர்களுக்கு மிகவும் கடினமாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் வெளியிடத்திற்கு சென்றால்தான் ஒரு புதிய தொடக்கத்தை தொடங்குவார்கள். மேலும் அவர்கள் விரும்பியவர்களாக மாற அவர்கள் வெளியே வந்தால்தான் முடியம்.

இவர்கள் தனியாக இருக்கும் பொது இவர்கள் மிகவும் வலிமையானவர்களாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

தனுசு

இவர்களுக்கு வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் முதல் முறை அதனை தவற விட்டுவிடுவார்கள். இவர்கள் வெவேறு இடங்களில் வாழ்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்.

புதிய விஷயங்களும், அனுபவங்களும் இவர்களுக்கு ஊக்கத்தைத் தருகிறது.

இவர்கள் சுதந்திரத்தை உணரும்போது அதனை மேலும் மேலும் அனுபவிக்க விரும்புவார்கள். அதற்கான முயற்சியையும் செய்வார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers