22 ஆண்டுகள் தனி நபராக வாழும் ஒரு பழங்குடி நபரின் வாழ்க்கை - ஏன் அவர் மற்றவர்களுடன் வாழவிரும்புவதில்லை...?

Report Print Abisha in வாழ்க்கை முறை

கடந்த 22 ஆண்டுகளாக பிரேசில் நாட்டில் ஆமேசான் காட்டுப்பகுதியில் தனி ஆளாக ஒரு பழங்குடி இன ஆண் தனியாக வசித்து வருகிறார்.

இது குறித்த கானொளியை பிரேசில் அரசாங்கத்தின் புனாய் குழு வெளியிட்டிருந்தது.

அவருடன் இருந்த அனைவரும் இறந்துள்ள நிலையில், இவர் மட்டும் தனியாக அந்த காட்டுப்பகுதியில் வசித்து வருகிறார்.

அவர் வசிக்கும் பகுதி நான்காயிரம் ஹெட்டர் பரப்பளவில் பரவி காணப்படுகின்றது. அந்த பகுதியில் அழிக்கப்பட்ட காட்டுப்பகுதிகளும், தனியார் பண்ணைகளும் காணப்படுகின்றன. ஆனால் அரசு சார்பில் அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புனாய் அமைப்பு அவரை 1996 ஆம் ஆண்டிலிருந்து அந்த தனி மனிதனை பின் தொடர்ந்து எடுத்த காணொளியை ஒரு வருடங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அவர் அந்த பகுதியில் இருக்கும் மரங்களை கோடாரியால் வெட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பிரேசில் நாட்டின் அரசமைப்பு சட்டபடி அந்நாட்டின் பூர்வ குடிகளுக்கு அவர்களின் நிலத்தின் மீது அதிகாரம் இருக்கிறது.

பழங்குடிகளுக்காக பணி செய்யும் survival international அமைப்பை சேர்ந்த ஒருவர் தனிமனிதனாக வாழும் காளொளி குறித்து அரசு வெளியிடுவதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த மனிதர் குறித்து வேறு என்ற தகவலும் தெரியவில்லை, அவரைபற்றி பல கட்டுரைகள், புத்தகங்கள் வெளிவந்துள்ளனர். குறிப்பாக சொல்ல போனால் அவர் வெளிமனிதர்களுடன் தொடர்பில்லாதவர் பட்டியலில் உள்ளார்.

முன்னதாக 6 பழங்களுடியினர்களுடன் வசித்து வந்த அந்த நபர், 1992 ஆம் ஆண்டு விசாயிகள் அவர்கள் மீது நடத்திய தாக்குதலில் அனைவரும் இறந்து போனதால் தற்போது அவர் தனியாக வசித்து வருகின்றார்.

தற்போது வெளிமனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பாமல் வாழும் அந்தநபர் இருக்க காரணம் அவர் முன்பு எதிர் கொண்ட பிரச்சனைதான்.

மேலும் 1970 1980 ஆண்டுகளின்இடைப்பட்ட காலத்தின் இந்த பகுதியில் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு பின் பலர் தொழிற்சாலைகள் அமைக்க அந்த பகுதிக்கு பெருமளவில் நிறுவனங்கள் வந்ததே அந்த இனத்தின் அழிவிற்கு காரணமாக உள்ளது என்று கருதப்படுகின்றது.

ஆனால் அவர் வைக்கோலினால் ஆன வீடு அமைத்து கொண்டு வாழ்துள்ளார் என்பதும், பப்பாளி சோளம் பயிர்கள் விளைவித்துள்ளார் என்றும் புனாய் அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த கானொளி முக்கியமானதாக இல்லை என்றாலும், இது மனித இனம் அழிவின் விழிம்பை காட்டுகின்றது.

amazon forest

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers