இந்த விரலில் மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்

Report Print Kavitha in வாழ்க்கை முறை
1012Shares

சரியான விரலில் மோதிரம் அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம் என இரண்டையுமே வழங்கும்.

எப்படி மோதிரம் அணிய வேண்டுமென்பதை சரியாக தெரிந்து கொண்டு அணிந்தால் வாழ்க்கையில் செல்வ செழிப்போடு இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது

தற்போது எப்படி மோதிரம் அணிய வேண்டும் மற்றும் எந்த விரலில் அணிவதால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

இடது கை அல்லது வலது கை

நிச்சயதார்த்த மோதிரத்தை இடது கையில் அணிவது அவர்களின் இதயத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் என்பது பழங்காலம் முதலே இருக்கும் ஒரு நம்பிக்கையாகும்.

நமது வலது கை உடல் செயல்பாடுகளுடனும், இடது காய் மனதின் செயல்பாடுகளுடனும் தொடர்பு கொண்டது. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் மோதிரம் அணியும் கையானது மாறுபடும்.

கட்டை விரலில் மோதிரம்

கட்டை விரலில் மோதிரம் அணிவது உங்கள் உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், ஆற்றலை புதுப்பித்து கொள்ளவும் பயன்படும்.

ஒருவேளை நீங்கள் ஏதாவது நீண்ட நாள் நோயிலிருந்து விடுபட விரும்பினால் கற்கள் பதிக்காத வெள்ளி மோதிரத்தை கட்டை விரலில் அணிவது நல்லது.

உங்கள் விரலின் உருவத்தை பாதிக்காத வடிவில் மோதிரத்தை அணிவது முக்கியமானது.

ஆள்காட்டி விரல்

பணியில் பதவி உயர்வு பெறவும் சிறப்பான எதிர்காலத்தையும் விரும்புபவர்கள் ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியலாம்.

ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவது ஒருவரின் தனிப்பட்ட ஆளுமையை அதிகரிக்கவும், சுயமரியாதை மற்றும் தன்னம்பிகையை அதிகரிக்கவும் செய்யும்.

வெற்றிகரமான எதிர்காலத்தை வடிவமைத்து கொள்ள தேவையான மனோபலமும், பொறுப்புணர்வும் ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதன் மூலம் கிடைக்கும்.

நடுவிரல்

காதல் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய சிறந்த துணையை தேடுபவர்கள் நடுவிரலில் மோதிரம் அணியலாம்.

தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரம் அணிவது கூடுதல் சிறப்பு. நடுவிரலில் மோதிரம் அணிவது நீங்கள் விரும்புவர்களின் கவனத்தையும், காதலையும் பெற்றுத்தரும். இது ஒருவரை அதிக வசீகரமாக காட்டுவதுடன் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகளையும் குறைக்கும்.

மோதிர விரல்

அதிக செல்வம் வேண்டுமென்று விரும்பினால் அவர்கள் மோதிர விரலில் மோதிரம் அணிய வேண்டியது அவசியம்.

அதேசமயம் அது தங்கத்தில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். செல்வத்திற்கும், பணப்புழக்கத்திற்கும் மோதிர விரல்தான் பொறுப்பாகும்.

சுண்டு விரல்

சுண்டு விரலில் மோதிரம் அணிவது ஒருவருடைய உள்ளுணர்வை அதிகரிக்கும். மேலும் ஹார்மோன் சமநிலை மற்றும் புரிந்துணர்வு போன்றவற்றையும் அதிகரிக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்