குழந்தை பிறந்த பின்னர் அதிகமான உடல் எடையை எப்படி குறைத்தேன்? ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்

Report Print Raju Raju in வாழ்க்கை முறை

குழந்தை பிறந்த பின்னர் தனது உடல் எடையை குறைக்கவும் மீண்டும் அழகாகவும் தான் பட்ட கஷ்டம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

பல பெண்கள் குழந்தை பிறந்த பின் ஏன் எடையை குறைக்க வேண்டும் என எண்ணி, அதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. உடல் எடை அதிகரிப்பதால் வரும் ஆபத்துகளையும் உணர்வதில்லை.

இந்நிலையில் குழந்தை பிறந்த பின், அழகை எப்படி மேன்படுத்தி கொள்வது என்பது பற்றி கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

அவர் கூறுகையில், குழந்தை பிறந்த பின்பு என் உடல் எடை மிகவும் அதிகரித்துவிட்டது.

குழந்தையை தனியே விட்டு விட்டு வெளியே போக முடியாத நிலையில், வீட்டிலேயே உடற்பயிற்சியை ஆரம்பித்தேன்.

தாயான பின்பு மருத்துவர் அறிவுரைப்படி தான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி பொருந்தாது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உணவிலும் கட்டுப்பாடு தேவை. எனக்கு எண்ணெயில் வறுத்த பொரித்த உணவு வகைகள் பிடிக்கும். உடல் எடையை குறைக்க அவைகள் மீதான ஆசையை துறந்தேன்.

ஜங்க் ஃபுட் அறவே கிடையாது. வேக வைத்த காய்கறிகள், பழங்கள், சாலட் போன்ற உணவு வகைகள் தான் என் சாப்பாட்டில் இடம்பெற்றிருந்தது

ஒருசேர அனைத்தையும் கஷ்டப்பட்டு, கடைப்பிடித்த பின்புதான் உடல் எடையில் குறிப்பிட்ட மாற்றம் தெரிந்தது. மகிழ்ச்சியோடு அதை தொடர்ந்தேன் எப்படியோ என் உடல் அழகை மீட்டெடுத்து விட்டேன். இப்போது நடிக்கவும் செய்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்