முகேஷ் அம்பானி மகனுக்கு திருமணம்! வைரலாகும் திருமண அழைப்பிதழின் முழு வீடியோ

Report Print Raju Raju in வாழ்க்கை முறை

முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கு கடந்த டிசம்பர் 12ஆம் திகதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இஷாவின் சகோதரர் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் திகதி நடைபெற உள்ளது.

ஆகாஷின் வருங்கால மனைவி வைர வியாபாரியின் மகளாம். இவர்களின் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ரோஸ் கலர் பெட்டியில் அழைப்பிதழ் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் அடிப்பகுதி முல்லை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேல் பகுதியில், சூரிய ஒளியில் தாமரைகள் ஆங்காங்கே மலர்ந்திருக்கிறது, மயில்கள் நடனமாடுகிறது, பறவைகள் பறக்கின்றன. பசுக்களுக்கு நடுவே ராதையும் கிருஷ்ணரும் அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள்.

இதைத் திறந்தவுடன், மேல் பகுதியில் ராதா கிருஷ்ணா படம் இருக்கிறது.

சுற்றிலும் வெள்ளி ஃப்ரேமில் உள்ளது. இனிமேல் தான் கல்யாண பத்திரிக்கையே வரப்போகுது. ஆரஞ்சு நிறத்தில் அந்த அழைப்பிதழ் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அதைத் திறந்தவுடன் நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்கங்கள் விரிந்து கொண்டே செல்கிறது.

ஒரு கல்யாண பத்திரிகை மட்டும் எப்படியோ ரூ.1.5 லட்சத்திற்கு மேல இருக்குமாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers