எவ்வளவு சம்பாதித்தாலும் கையில காசு நிக்கமாட்டேங்கிதா? அதுக்கு இது தான் காரணமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணம் தங்கவில்லை என்று புலம்பிக் கொண்டே இருப்பதுண்டு.

அதற்கு உங்கள் அலட்சியம் ஒரு காரணமாக இருந்தாலும் நீங்கள் வீட்டில் வைத்துள்ள சில பொருட்களும் காரணமாக இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

இந்த பதிவில் பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் வீட்டில் வைக்கக்கூடாது பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

 • தினமும் காலையில் கடவுள்களுக்கு பூக்கள் வைத்து வழிபடுவது நல்லதாகும். ஆனால் அந்த மலர்களை மாலை நேரத்தில் எடுத்துவிட வேண்டும். ஏனெனில் வாடிய மலர்கள் கடவுள் அருகில் இருக்கும் போது அது உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகளை பரப்பும்.
 • தேவையற்ற பொருட்கள் வீட்டில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
 • பால் தொடர்பான எந்த பொருளும் வீட்டில் திறந்த நிலையில் வைக்க கூடாது.
 • காலணிகள் மற்றும் சாக்ஸுகள் பூஜையறை அருகில் இருக்க கூடாது. வீட்டிற்குள் ஷூ அணிந்து செல்வதை தவிருங்கள்.
 • முட்களுடைய தாவரங்களை உங்கள் வீட்டிற்குள் ஒருபோதும் வைக்காதீர்கள். இவை உங்கள் வீட்டில் குழப்பத்தையும், வறுமையையும் ஏற்படுத்தும். ஒருவேளை அவசியப்பட்டால் இதனை உங்கள் வீட்டிற்கு வெளியில் மட்டும் வைத்து கொள்ளுங்கள்.
 • உங்கள் வீட்டில் தெற்கு மூலையில் துளசி இருந்தால் அது உங்கள் குடும்பத்தின் நிம்மதியை குலைக்கும். எனவே தெற்கு மூலையில் துளசி வைப்பதையும், தெற்கில் இருக்கும் துளசி செடியை வணகுவதையும் தவிருங்கள்.
 • கிழக்கு மூலையில் இருக்கும் அரசமரத்தை வணங்குவது உங்கள் வாழ்க்கையில் பயத்தையும், பதட்டத்தையும் அதிகரிக்கும்.
 • உங்கள் இல்லத்தில் இருக்கும் வாஸ்து தோஷத்தால் கூட உங்களால் பணத்தை சேமிக்க இயலாமல் போகலாம்.
 • வீட்டிற்கு குடிபோகும் முன் கணபதி பூஜை செய்வது நல்லது.
 • கொஞ்சம் சிவப்பு சந்தனம், முந்திரி மற்றும் ஒரு சிறிய கல்லை எடுத்துக்கொண்டு அதனை ஒரு சிவப்பு துணியில் கட்டிக்கொள்ளவும். இதனை வீட்டின் வடக்கு மூலையில் வைத்துவிட்டு செவ்வாய் கிழமையில் வழிபட்டால் உங்கள் இல்லத்தில் இருக்கும் எதிற்மறை சக்திகள் அனைத்தும் விலகிவிடும்.
 • செலவை குறைக்க பழைய வீடுகளில் இருக்கும் கதவுகள் ஜன்னல்கள் போன்றவற்றை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
 • நீங்கள் வீட்டிற்குள் வைக்கும் சொடிகள் நேர்மறை சக்திகளை உங்கள் வீட்டிற்குள் பரவச்செய்து செல்வத்தின் வரவை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தரும் சில உட்புற செடிகளை வாங்கி உங்கள் வீட்டிற்குள் வைக்கவும்.
 • வீட்டிற்குள் நுழையும்போது எப்பொழுதும் உங்கள் பத்தாம் கதவில் இடிக்காத படி பார்த்து கொள்ளுங்கள்.
 • முன்கதவில் ஸ்வஸ்திக் சின்னத்தை தொங்க விடுவது உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை அழைத்துவரும்.
 • அனைத்து வீடுகளிலும் விநாயகரின் சிலை இருக்க வேண்டியது அவசியமாகும். விநாயகரை அடிக்கடி சுத்தப்படுத்தி தினமும் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுங்கள். மீதியை அவர் பார்த்து கொள்வார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers