சுவிஸில் அம்பானி மகனின் பேச்சுலர் பார்ட்டி: மீண்டும் களைகட்டும் கொண்டாட்டம்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

கடந்த ஆண்டு மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்த அம்பானி மார்ச் மாதம் தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தை நடத்தவிருக்கிறார்.

இதற்காக, மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது அம்பானி வீடு. மகன் ஆகாஷ்க்கு - ஸ்லோகா மேத்தாவுக்கும் மார்ச் 10 மற்றும் 11 ஆகிய இரு திகதிகளில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நடைபெறவிருக்கிறது.

திருமண பத்திரிகையை சித்திவிநாயக் கோயிலில் வைத்து பூஜை செய்துள்ளனர். மகளின் திருமணத்தை தனது வீட்டில் நடத்திய அம்பானி, மகனின் திருமணத்தை மும்பையில் உள்ள பெரிய ஹொட்டலில் நடத்தவிருக்கிறார்.

மேலும், ஆகாஷ் அம்பானி தனது பேச்சுலர் பார்ட்டியை சுவிட்சர்லாந்தில் கொண்டாடவிருக்கிறார். இந்த பேச்சுலர் பார்ட்டிக்கு 500 நண்பர்களை சுவிட்சர்லாந்து அழைத்து செல்கிறார்.

ஏற்கனவே மகளின் திருமணத்தால் அதிக கவனம் ஈர்த்த அம்பானி குடும்பத்தார் மீது மீண்டும் மக்கள் பார்வை திரும்பியுள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers