ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகன் பற்றிய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரின் ம்கன் விசாகனுக்கும் அடுத்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விசாகன், படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.

இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் எளிமையாக நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.

விசாகனும் விவாகரத்து பெற்றவர். கனிகா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனை கனிகா திருமணம் செய்து கொண்டார்.

நடிகை த்ரிஷா மணம்முடிக்க நிச்சயம் செய்யப்பட்டு இருந்தவர்தான் வருண் மணியன். அவர்களது திருமணம் நடைபெறவில்லை. இதையடுத்து கனிகாவை வருண் மணியன் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers