கேரளாவில் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு காட்டை பாதுகாக்கும் குடும்பம்!

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

கேரளாவில் ஒரு குடும்பம் காட்டை பாதுகாக்க தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியபட வைத்துள்ளது.

கேரளமாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி. ஆசிரியர்களான இவர்கள் 1994 ஆம் ஆண்டு அட்டப்பாடி வனப்பகுதி வரண்டு கிடப்பதை கண்டு அதற்கு நீர் கொண்டு வர முயற்சி செய்ய முற்பட்டனர்.

இந்நிலையில் அதற்கு அவர்கள் பார்த்து வரும் ஆசிரியர்பணி, விடை கொடுக்கபோவதில்லை என்று, வேலையை துறந்து. முழுநேரம் காட்டை பாதுகாக்கும் பணியை துவங்கினார்.

கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி

முதலில் இந்த பணிகளில் யாரும் உதவி புரியாத நிலையில் சில நாட்களுக்கு பின் அவர்களின் மகனான கவுதமின் நண்பர்களான சிறுவர் சிறுமியர் வந்து உதவி உள்ளனர். பின்பு சுற்றி வாழு மக்களும் இந்த பணிக்கு உறுதுணையாக செயல்பட துவங்கி உள்ளனர்.

முக்கியமாக அட்டப்பாடி வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததை கண்டு அதற்கு தீர்வு காண பல செயல்களில் முற்பட்டனர்.

அதாவது மண் அரிப்யை தடுத்தல், விழுந்த மரங்கழுக்கு மாற்று ஏற்பாடு செய்தல், சரியான காலத்தில் மழை பெய்ய அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய துவங்கினர்.

இப்படி வனத்தை பாதுகாக்கும் இத்தம்பதியினரின் மகன் பள்ளி படிப்பை கூட படிக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியம்.

இது குறித்துஅவர்கள் கூறியதாவது பள்ளி படிப்பு என்பது இந்த கால சூழலுக்கோ இயற்கை பாதுகாப்பிற்கோ உதவுவதில்லை என்று கூறுகின்றனர்.

கவுதம் மற்றும் அவர் மனைவி குழந்தைகள்

மேலும் கவுதமிடம் கேட்டபோது, தனக்கு பெற்றோர் கல்வி கற்று கொடுத்துள்ளனர் தனக்கு ஆங்கிலம் உள்பட ஐந்து மொழிகள் பேச தெரியும் என்றார்.

மேலும் கவுதமிற்கு வெப் டிசையனிங் உள்ளிட்ட டெக்னிகல் சார்ந்தவையும் கற்று தெரிந்துள்ளார். குறிப்பாக அவர்கள் வாழும் வீட்டையே இயற்கை சூழலுக்கு ஏற்றவகையில் அவரே வடிவமைத்துள்ளார்.

மேலும் தனது பெற்றோரை போலவே இவரும் தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தானே வாழ்க்கை முறையும் கல்வியையும் கற்று கொடுத்து வருகிறார்.

இயற்கையை அழிகாமல் இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்பதே இக்குடும்பத்தினரின் கருத்தாக உள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers