இந்த செடிகள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி வீசுங்க... வீட்டுக்குள் கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

நாம் குடியிருக்கும் வீட்டை எப்போழுதுமே வாஸ்து சாஸ்திரப்படி தான் அமைப்பது உண்டு. இவ்வாறு அமைப்பதன் மூலமாக நம் வாழ்க்கையின் சந்தோஷமும் செல்லவமும் நிலைத்து இருக்கும் என்பது ஐதீகமாகும்.

உண்மையில் சில பொருட்கள் உரிய இடத்தில் வைப்பதன் மூலமாக வீட்டிற்கு நன்மை வந்து சேருகின்றது. இல்லாவிடின் துன்பம் வருகின்றது.

வாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். ஃபெங் சுய் சாஸ்திரப்படி பார்த்தால் இந்த தாவரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொடுக்க கூடியது என்கின்றனர்.

அந்தவகையில் ஃபெங் சுய் சாஸ்திரப்படி கீழ்க்கண்ட தாவரங்களை வீட்டில் வைப்பதை தவிருங்கள்.

  • முட்களையுடைய ரோஜா செடியை தவிர கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது.
  • சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது. வேண்டும் என்றால் தோட்டத்தில் வைத்துக் கொள்ளலாம்.
  • புளிய மரம் மற்றும் மிர்ட்டில் செடி வகைகளில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் எனவே அந்த இடத்தில் வீடு கட்டுவது நல்லது அல்ல.
  • வாடும் செடிகள் மற்றும் பூக்கள் வீட்டில் இருப்பது துரதிர்ஷ்டமாகும்.
  • முட்களையுடைய மர வகைகள் மற்றும் பாபுல் மரம் போன்றவை எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.
  • இலவம்பஞ்சு மற்றும் பனை மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டமாகும்.
  • சிறிய அல்லது பெரிய தொட்டிகளில் உள்ள தாவரங்களை வடக்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி வைக்க கூடாது.
  • வீட்டில் தொங்கவிடும் படியான தொட்டிச் செடிகள் வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது வாஸ்து.
  • பெரிய மரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டினுள் ஏற்படுத்தும்.
  • கிழக்கு திசை பார்த்து மரங்கள் வைக்காமல் இருப்பது வீட்டுக்கு கெட்ட சக்தியை அழைத்து வராமல் இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers