2018ல் மறக்க முடியாத தமிழ், நடிகர் நடிகைகளின் மரணங்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

2018 ஆம் ஆண்டில் மறக்கமுடியாத தமிழ் நடிகர் நடிகைகளின் மரணங்கள்

ஸ்ரீதேவி

தமிழ், இந்தி, தெலுங்கு என 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி பிப்ரவரி மாதம் துபாயில் வைத்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

80 களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த இவர், பின்னர் பாலிவுட் உலகிற்கு சென்று அங்கு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

சீனு மோகன்

தமிழ் சினிமாவில் 1980-களில் வந்த வருஷம் 16, அஞ்சலி, தளபதி முதல் சமீபத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் வரை பல படங்களில் நடித்த, நடிகர் சீனு மோகன் டிசம்பர் 27 ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

விஜயராஜ்

திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’, ’நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமானார். திருமுருகன் இயக்கிய ‘எம்மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நவம்பர் 4 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ராக்கெட் ராமநாதன்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், பல குரலில் பேசி அனைவரையும் கவர்ந்த ராக்கெட் ராமநாதன் உடல்நலக்குறைவால் சென்னையில் செப்டம்பர் 5 ஆம் திகதி காலாமானார்.

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.

பிரியங்கா

வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பிரியங்கா.

இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் யூலை 18 ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

வெள்ளை சுப்பையா

பல ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் துணை நகைச்சுவை நடிகராக இருந்து வந்த வெள்ளை சுப்பையா செப்டம்பர் 6 ஆம் திகதி உடல நலக்குறைவால் காலமானார்.

நாகேஷ் தொடங்கி கவுண்டமணி, செந்தி, வடிவேலு ஆகியோருடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் என்றும் மறக்கா முடியாதவை. மேடை நாடகங்களிலும் நடித்து வந்த வெள்ளை சுப்பையா, ”மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி” இவர் சொந்தமாக பாடி நடித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...