உலகின் இரண்டாது பணக்காரரான பில்கேட்ஸ் அதிகம் விரும்பிப்படித்த புத்தகங்கள் எவை தெரியுமா?

Report Print Givitharan Givitharan in வாழ்க்கை முறை

இன்றைய காலத்தில் வாசிப்பு பழக்கமானது வெகுவாக அருகி வருகின்றது.

ஆனால் இன்று அதி உயர் பதவிகளில் இருப்பவர்கள் அந்த உயரத்தை அடைவதற்கு காரணமாக இருந்தவற்றுள் வாசிப்பு பழக்கமும் ஒன்றாகும்.

இதேபோன்றே மைக்ரோசொப்ட் நிறுவுனரும், உலகின் இரண்டாவது பணக்காரராகவும் திகழும் பில்கேட்ஸ் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்.

அவர் அதிகம் விரும்பிப் படித்த புத்தகங்கள் இவைதான்,

Educated

இப் புத்தகமானது Tara Westover எனும் பெண்மணியால் எழுதப்பட்டது. இப் பெண்மணி 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். வீட்டில் பெற்றோருடன் இருந்த காலப் பகுதியில் ஒருபோது பாடசாலைக்கோ அல்லது நோயால் வைத்தியர் ஒருவரை நாடியோ சென்றிருக்கவில்லை.

அதன் பின்னர் படிப்பை தொடர்ந்து கேம்பிரிஜ் பல்கலைக்கழத்தில் PhD பட்டத்தினையும் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் எழுதப்பட்ட Educated புத்தகத்தினை தனது மனைவியும் விரும்பிப் படிப்பார் என பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Army of None

இப் புத்தகமானது Paul Scharre என்பவரால் எழுதப்பட்டது. தானியங்கி ஆயுதங்கள் மற்றும் எதிர்கால யுத்தங்கள் தொடர்பில் இப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டே தனக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பத்தில் ஆர்வம் ஏற்பட்டதாக பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Bad Blood

John Carreyrou என்பவரால் எழுதப்பட்ட இப் புத்தகமானது தேனோசோக்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

தனது நண்பர்களே இப் புத்தகத்தினை படிக்குமாறு அவருக்கு எடுத்துக்கூறியிருந்தாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

21 Lessons for the 21st Century

இப் புத்தகமானது Yuval Noah Harari என்பவரால் எழுதப்பட்டது.

இது சேப்பியன்கள் மற்றும் ஹோமோ டீஸ் ஆகியோரின் கடந்த காலம், எதிர்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

The Headspace Guide to Meditation and Mindfulness

Andy Puddicombe என்பவரால் எழுதப்பட்ட இப் புத்தகமானது அவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது புத்த பிக்கு ஒருவரை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதில் தியானம் தொடர்பான பல தகவல்கள் உள்ளடங்கியுள்ளன.

“உங்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்துவது பற்றிய அவா இருந்தல் இப் புத்தகத்தை படியுங்கள்” என பில்கேட்ஸ் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...