அம்பானி மகள் திருமணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் செய்த செயல்: புகைப்படத்தால் கொண்டாடும் நெட்டிசன்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மகள் இஷாவின் திருமணம் மும்பையில் உள்ள ஆண்டலியா இல்லத்தில் நடைபெற்றது.

ஆடம்பரமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், அம்பானி உறவினர்கள் பங்கேற்றனர்.

100 மில்லியன் டொலர் செலவில் நடைபெற்ற இந்த திருமணம் உலக அளவில் கவனர் ஈர்க்கப்பட்டது.

பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் அமிதாப், அமீர் கான் போன்றவர்கள் கூட விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தனர்

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு வெள்ளித்தட்டில் தான் உணவு பரிமாறப்பட்டது. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அமிதாப்பச்சன் மட்டுமல்ல நடிகை ஐஸ்வர்யா ராயும் வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி சிறப்பித்துள்ளார். இவரது ஆடை ஒருபுறம் விமர்சிக்கப்பட்டாலும், திருமண விழாவில் இவர் உணவு பரிமாறிய புகைப்படம் வெளியானதையடுத்து நெட்சன்கள் புகழ்ந்துள்ளனர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்