தங்கத்தில் ஜொலிக்கும் திருமணம்! ஆடம்பரங்களுக்கு சொந்தக்காரியான இஷா அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் நாளை திருமணம் நடக்கவுள்ளது.

இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

அரண்மனை செட்டப்பில் வடிவமைக்கப்பட்டு நடந்த இந்த நிச்சயதார்த்ததின் செலவு மட்டும் 26 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையும் தாண்டி, இஷா - பிரமோலின் திருமண பத்திரிகை 1 லட்சம் ஆகும்.

திருமண அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காக குடும்பத்தினருடன் அம்பானி கேதார்நாத் கோயிலுக்கும் சென்றார்.

அக்டோபர் 29ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்ற அம்பானி சுமார் 20 நிமிடங்கள் அங்கு பூஜைகள் செய்துவிட்டு, ஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு தனது மகள் இஷாவின் மீது தனிப்பட்ட பிரியம் என்பதால், தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஆடை மற்றும் சவுதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட காரினை பரிசளிக்கவிருக்கிறார்.

இஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

இவ்வளவு ஆடம்பரங்களுக்கு சொந்தக்காரரான இஷா அம்பானி ஆசிய பெண்கள் வணிகர்களில் 12-ம் இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் அமபானியின் மகளாக இவர் இருந்தாலும் இவருக்கான தனி வர்த்தகங்களும் உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குனராக ஈஷா அம்பானி உள்ள நிலையில் இவரது தனிப்பட்ட மொத்த சொத்து மதிப்பு 4,710 கோடி ரூபாய் ஆகும்.

ஜியோவின் போர்டு உறுப்பினராக 2014-ம் ஆண்டுச் சேர்ந்த இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தினை நிர்வகித்து வருகிறார்.

2015-ம் ஆண்டு முதல் தங்கள் ஜியோ வணிகத்தினை இஷா கவனித்து வருகிறார்.

26 வயது ஆன ஈஷா அம்பானி 2008-ம் ஆண்டே இளமையான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers