ஆண்களின் விந்தணுக்கள் குறைவிற்கு சில முக்கிய காரணம் இதோ!

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆரோக்கியமான கருவளத்துடன் இருந்தால் தான் குழந்தை பாக்கியத்தை பெற முடியும்.

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு ஆணுக்கு பிறப்பிலேயே விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுவதில்லை, மாறாக அவர்கள் மேற்கொள்ளும் சில தவறான பழக்கவழக்கங்களே இதற்கு காரணமாக அமைக்கிறது.

ஆண்களின் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள்
 • ஆண்களின் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரிக்கின்றபோது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.
 • அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கும் விந்தணு குறைபாடு ஏற்படும். எனவே உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
 • செல்போன்களை ஆண்கள் தங்களது பின்புற பாக்கெட்டில் வைக்கும்போதும் எழுகிற அதிர்வுகள் மற்றும் கதிரியக்கங்கள் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.
 • அதிக வெப்பம் நிறைந்த இடங்களில் ஆண்கள் அதிக நேரம் இருக்ககூடாது. 4 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் இருந்தால் சரியான அளவில் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
 • புகைபிடித்தல் பழக்கம் இருந்தால் இரத்த ஓட்டத்தை குறைத்து விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.
 • ஆண்கள் மன அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை சரிசெய்து கொள்வது நல்லது. ஏனெனில் இந்த பிரச்சனை அவர்களின் ஆண்மையை பாதிக்கும்.
 • அளவுக்கதிகமாக ஆல்கஹால் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் விந்தணுக்கள் குறைக்கிறது.
விந்தணுக்கள் அதிகரிக்க செய்ய வேண்டியவை
 • மிகவும் இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம். மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம். பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.
 • மது அருந்துவதை நிறுத்துங்கள். மது அருந்துவதால் பாலியல் திறனுடன் நேரடியாக தொடர்புடைய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.
 • உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், அதிகமாக செய்ய வேண்டாம்.
 • எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதற்கும் கருத்தரிக்கும் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால் அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.
 • தினமும் 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனபெருக்க திறன் 31 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்திற்குமட்டுமல்ல, இனப்பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்