எந்த வயதினர் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

ஒவ்வொருவரும் தினமும் 8 மணி நேரம் கட்டாயம் தூங்கினால் உடலில் எந்த பிரச்ச்சனைகளும் இன்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.

மேலும் எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு அதை பின்பற்றி வந்தால், அவர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

0-3 மாதம்

பிறந்த குழந்தை 3 முதல் மூன்று மாதம் வரைக்கும் ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவது மிகவும் அவசியமாகும்.

4-11 மாதம்

4 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

1-2 வயது

1 முதல் 2வயதை அடைந்த குழந்தைகள், ஒரு நாளைக்கு 11-14 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகும். ஏனெனில் தூக்கம் என்பது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.

3-5 வயது

தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்க வேண்டும். ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

6-13 வயது

ஒன்பது மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை தினமும் தூங்க வேண்டும். தினமும் 7 மணி நேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணி நேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல.

14-17 வயது

14 வயதுக்கும் மேல் ஆகி விட்டால், அவர்கள் 8-10 மணி நேரம் வரை அவசியம் தூங்க வேண்டும்.

18-64 வயது

18 வயதுக்கு மேல் ஆனவர்கள், ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள்

65 வயதிற்கு மேல் ஆனவர்கள் ஒரு நாளைக்கும் 7-8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். இதனால் அவர்களின் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பு

சிறிய வயதில் இருந்து மேல் குறிப்பிட்டுள்ள வயதினற்கேற்ற தூக்கத்தை பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers