அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? அதற்கு என்ன காரணம்?

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி.லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும்.

எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே தோன்றும், இவ்வாறு தோன்றும் உணர்வுகள் இயல்பானது.

ஆனால், சிலருக்கு 400 மி.லி அளவை விட குறைவாக தேங்கி இருக்கும் போதே சிறுநீர் வருவது போன்ற உணர்வுகள் தோன்றும்.

அடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்வதற்கு என்ன காரணம்?
  • ஒருவரின் சிறுநீர்ப்பையில் 200 அல்லது 300 மி.லி அளவு சிறுநீர் தேங்கும் போதே அடிக்கடி சிறுநீர் வந்தால் அது ஏதோ ஒரு உடல்நிலை தொடர்பான பிரச்னையின் ஆரம்பமாகும்.
  • இது போன்ற கட்டுப்பாடற்ற சிறுநீர் பிரச்சனைகளுக்கு, தனது சிறுநீர் பையில் காசநோய் ,தொற்றுநோய், புற்றுநோய் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளின் காரணமாகக் கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
  • ஆனால் இந்த நோய்களின் மூலம் எந்த காரணத்தால் சிறுநீர் அடிக்கடி வருகிறது என்பதை மட்டும் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றார்கள்.
  • எனவே அடிக்கடி சிறுநீர் பிரச்சனைகள் ஏற்பட்டால் காசநோய், நீரிழிவுநோய், புற்றுநோய் இது போன்ற நோய்களுக்கான பரிசோதனையை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
ஏன் அடிக்கடி சிறுநீர் வருகிறது?
  • மன அழுத்தம் அதிகமாக இருந்தால், ஒருவித பதட்ட உணர்வு ஏற்படுவதுடன், மைய நரம்பு மண்டலம் சிறுநீர்ப்பையில் ஒருவித தூண்டலை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
  • ஆல்கஹாலில் பீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீர் அடிக்கடி வெளியேறும். ஏனெனில் ஆல்கஹால் உள்ள DNH எனும் அமிலம் வெளியீட்டின் போது இடையூறை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை உண்டாக்கும்.
  • பெண்களின் உடலிலேயே மிகப் பெரிய ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் போது, அதாவது இறுதி மாதவிடாயின் அறிகுறியாக, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் உண்டாகும்.
  • கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் உள்ள குழந்தை வளர்வதால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அடிக்கடி சிறுநீரானது வெளியேறும்.
  • உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
  • உடலில் தைராய்டு பிரச்சனை இருந்தால், அதனால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் உண்டாகும்.
  • சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும்.
  • நம் உடலில் கால்சியம் சத்துக்கள் அதிகரித்து விட்டால், அது சிறுநீரகத்தில் தேங்கும். அதனால் சிறுநீரின் அளவு குறைந்து, அடிக்கடி சிறுநீரை வெளியேற்ற நேரிடும்.
  • சிறுநீரகத்துடன் நரம்பு தொடர்புடையதால், நரம்பு பக்கவாதம் பிரச்சனை இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்