உங்கள் கைகளில் இந்த அறிகுறிகளாம் இருக்க? அப்போ உஷாரா இருங்க

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

உடலில் கைகள் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. எந்த ஒரு செயலை செய்வதற்கும் கைகள் மிகவும் அவசியம்.

நம்மில் பலர் கைகளைப் பராமரிப்பது குறைவு. ஆனால் அந்தக் கைகளின் மூலமாக ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைக் கணிக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

அத்தகைய் கைகள் சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய சில வியக்க வைக்கும் உண்மைகள் பற்றி காண்போம்.

சிவந்த உள்ளங்கைகள்
  • ஹார்மோன் சமநிலையில் ஏற்படும் மாற்றமே சிவந்த உள்ளங்கைகளுக்க காரணமாகின்றன. மேலும் கைகள் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்களுக்கு கல்லீரல் நோய்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
  • ஆனால் கர்ப்பிணிகளுக்கு கைகள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது சாதாரணமானது மேலும் இது கைகளில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதை குறிக்கும்.
வியர்க்கும் உள்ளங்கைகள்
  • உள்ளங்கை அடிக்கடி வியர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம், அதிக வியர்வை மற்றும் தைராய்டு பிரச்சினை ஆகும்.
அடிக்கடி விறைக்கின்ற கைகள்
  • சிலருக்கு அடிக்கடி கை விறத்தப் போய்விடும் தன்மை காணப்படுகின்றது. இது நரம்பு தொடர்பான பிரச்சினைகளுக்கான அறிகுறியே.
  • மேலும் இவை இரத்த சோகை அல்லது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் எனவும் அறியப்படுகின்றது.
வறண்ட உள்ளங்கை
  • உடலில் நீர்ச்சத்துப் பற்றாக்குறை மற்றும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு ஆகியன காரணங்களால் கைகள் வறண்டு உலர்ந்த நிலையில் காணப்படும்.
  • மேலும் வறண்டு உலர்ந்த கைகளை உடையவர்கள் அதிகம் தண்ணீரை பருகவேண்டும். அத்தோடு உங்கள் உணவில் எண்ணெய் மீன், விதைகள் மற்றும் தானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கை நடுக்கம்
  • பொதுவாக அதிக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த கைநடுக்கமானது காணப்படும். அது அவர்களின் உள்ளுறுப்புக்கள் பாதிப்படைந்திருப்பதற்கான காரணம் ஆகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்