உங்கள் மூக்கு எப்படியோ உங்கள் குணமும் அப்படியே

Report Print Trinity in வாழ்க்கை முறை

முகத்திற்கு மட்டுமல்ல உயிருக்கும் முக்கியமானது மூக்கு. சுவாசம் இல்லாவிட்டால் நீங்கள் ஏது. அப்படிபட்ட முக்கியமான மூக்கு உங்கள் குணங்களை பற்றியும் சொல்கிறது. உங்கள் மூக்கின் வடிவம் கொண்டு உங்களின் குணநலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சிறிய வகை மூக்குகள்

சிறிய வகை மூக்கு கொண்டிருப்பவர்களை நண்பர்களாக கொண்டிருந்தால் அவர்களோடு அதிகம் சண்டையிட்டு கொள்ளாதிர்கள். ஏனென்றால் இவர்கள் மிகவும் சுகபோகிகள் மற்றும் மகிழ்ச்சியானவர்கள். இவர்களோடு இருப்பவர்கள் எப்போதும் மகிழ்வாக வைத்திருப்பார்கள். ஆனால் கோபம் வந்து விட்டாலோ அவ்வளவுதான். எதிரே யார் இருந்தாலும் காலி. மேலும் இவர்கள் தங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

நீளமான மூக்கு கொண்டவர்கள்

இது போன்ற நீளமான மூக்கு கொண்டவர்கள் தலைமைப்பதவிக்கு தகுதியானவர்கள். வியாபார தந்திரங்கள், கூர்மையான அறிவு போன்றவற்றை கொண்டுள்ள இவர்களுடன் பழகினால் உங்கள் பாதை நிச்சயம் வெற்றியை நோக்கித்தான் திரும்பும். இவர்களுடைய பலம்தான் சில சமயம் பலவீனமாகவும் போகிறது. ஆனால் எப்போதும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இவர்களுக்கு எதுவும் தடையாக இருப்பதில்லை.

பெரிய மூக்கு கொண்டவர்கள்

மூக்கின் நுனி அகலமாக இருப்பவர்கள் மேலும் மூக்கின் துவாரங்கள் பெரிதாக இருப்பவர்கள் அதிகார பலம், தன்னம்பிக்கை, கர்வம், தனித்தன்மையோடு செயல்பட கூடியவர்கள் ஆக இருப்பார்கள். சுயதன்மானம் உடைய இவர்கள் எளிதில் எதனையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். மேலும் யாருக்கும் அடிபணிந்து வேலை செய்ய மாட்டார்கள். மேலும் அளவாக பேச விரும்ப மாட்டார்கள்.

பட்டன் மூக்கு அமைப்பு

ஒரு சிலருக்கு சிறியதாக அழகாக முகத்தில் ஒரு பொத்தான் வைத்தது போல மூக்கு காணப்படும். இவர்கள் கற்பனை திறன் வாய்ந்தவர்கள். தங்களது மூக்கு குறித்து எப்போதும் கர்வம் கொண்டிருப்பார்கள். இவர்கள் மிகவும் அன்பானவர்கள் , கருணையானவர்கள் பத்திரமாக தங்கள் அன்புக்குரியவர்களை பார்த்து கொள்வார்கள். மேலும் உணர்ச்சி ரீதியாக இவர்கள் சமநிலை இல்லாமல் இருப்பார்கள். உறுதியான மனிதர்களை பார்க்கையில் இவர்கள் லேசாக பயப்படுவார்கள்.

சதைப்பற்றுள்ள மூக்கு

ஒரு சிலருக்கு மூக்கு நுனி அடர்த்தியாக சதைபிடிப்போடு காணப்படும். இவர்கள் வேகமானவர்கள். பரபரப்பானவர்கள். துடிப்பு மிக்கவர்கள். தேவையற்றவைகளுக்காக நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். சில சமயம் இவர்களை முரட்டுத்தனமானவர்களாக மக்கள் பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் அன்பானவர்கள். தங்கள் துணையை நேசிப்பவர்கள் மற்றும் நேர்மையானவர்களும் கூட.

கிரீக் மூக்கு.

இந்த வகையிலான மூக்கை கிரீக் மூக்கு என்று குறிப்பிடுகிறோம். துவாரங்கள் சிறிதாக இருக்கும். மூக்கு நேராக இருக்கும். இந்த வகை மூக்கு கொண்டவர்கள் மிக திறமையானவர்கள். இவர்கள் லாஜிக்கை மட்டுமே நம்பும் புத்திசாலிகள். இயல்பாகவே நல்லவர்கள் ஆகவே சார்ந்து இருக்கும் தன்மை கொண்டவர்கள். எப்போதும் நீங்கள் இவர்களின் அன்பை பயப்படாமல் எதிர்பார்க்கலாம்.

அகண்ட மூக்கு

இந்த வகை மூக்கு என்பது நீள அகலங்களில் அகண்ட தன்மை கொண்டிருக்கும். ஆகவே இவர்கள் தனிப்பட்டு தெரிவார்கள். இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக காட்டி கொள்வார்கள். மேலும் பொதுவாக இவர்கள் எதிலும் ஆர்வமாக இருப்பார்கள். மேலும் மற்றவர்களை ஈர்ப்பதில் வல்லவர்கள். திறந்த மனதோடு இருப்பதால் உரையாடல்களை மிக ஆழமாக கொண்டு செல்வதில் தேர்ந்தவர்கள்.

சீன மூக்கு

ஒரு சிலருக்கு சீனத்து மக்கள் போல மூக்கு கொஞ்சம் வளைந்து காணப்படும்.இரு புருவங்களுக்கு இடையில் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில ஒரு சிறு பள்ளம் ஏற்பட்டிருக்கும். இந்த வகை மூக்கு கொண்டவர்கள் நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர்கள். இவர்களது நேர்மையின் காரணமாக இவர்களுக்கு நல்லவர்கள் மட்டுமே நண்பராக அமைவார்கள். மேலும் இவர்கள் புதிய புதிய கண்டிபிடிப்பாளர்களாகவும் இருப்பார்கள்.

கழுகு மூக்கு.

ஒரு சிலருடைய மூக்கு பருந்தின் மூக்கின் வடிவத்தை ஒட்டி சற்று அகலமாக வளைந்து காணப்படும். இவர்கள் மிகவும் தன்னம்பிக்கையாக காணப்படுவார்கள். அடுத்தவர் உதவியை எதற்காகவும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்கள் கால்களில் தாங்களே நிற்பார்கள். ஆகவே கூட்டத்தில் இவர்கள் எப்போதும் தனித்து நிற்பவர்களாகவே இருப்பார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...