நீங்கள் பிறந்த மாதம் என்ன? இந்த ராசிக்கல்லை அணிந்திடுங்கள்

Report Print Fathima Fathima in வாழ்க்கை முறை

ஒருவர் எந்த மாதத்தில் பிறந்தார் என்பதை அடிப்படையாக வைத்து, அதற்கு தகுந்தபடி முதலில் கிரகங்களின் இயக்கங்களை ஆராய வேண்டும்.

இதற்கேற்றாற் போல் ராசிக்கற்களை மோதிரமாக அணிந்தால் வாழ்க்கையில் ஆரோக்கியம், செல்வம் என எல்லா வளங்களையும் பெறலாம்.

ஜனவரி

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் கோமேதகம் மற்றும் ரத்தினக் கற்கள் அணிவது சிறப்பு.

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் புஷ்பராகக் கல்லை அணிந்து கொள்ளலாம். இந்த கல்லை அணிவதன் மூலம் இதுவரை கட்டுக்கடங்காத கோபக்காரராக இருந்த நீங்கள் சாந்தமாக மாறிவிடுவீர்கள்.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் கோமேதகக் கல்லை அணிவது சிறப்பு. இந்த கல்லை அணிந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் வைரக்கற்கள் பதித்த மோதிரத்தை அணிந்து கொ்ளவது அவர்களுக்கு ஏற்ற ஒன்று. வைரம் என்பது காதலின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மே

மே மாதத்தில் பிறந்தவர்கள் மரகத கற்களை அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் முத்து பதித்த மோதிரத்தை வாங்கி அணிவது சிறப்பைத் தரும்.

ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடியது மாணிக்கக் கற்கள் தான். இதுவரை தடங்கல்களாக இருந்து வந்த காரியங்கள் அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற ஆரம்பிக்கும்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் பச்சை மணிக்கல் என்னும் வெளிர் பச்சை நிறக்க் பதித்த மோதிரத்தை அணிவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் நீல நிறத்தில் உள்ள மாணிக்கக் கற்களை அணிந்து கொள்வது சிறந்தது. இதை தந்திரக் கற்கள் என்று சொல்வார்கள்.

அக்டோபர்

அக்டோபரில் பிறந்தவர்கள் புஷ்ப ராகக் கல்லை அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் புஷ்ப ராகக்கல் மற்றும் மரகதக் கற்கள் பதித்த மோதிரங்களை அணிந்து கொள்வது நல்லது.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நீலக்கற்கள் தான் அதிர்ஷ்டக் கற்கள். கும்ப ராசிக்காரர்களுக்கும் இது மிகப் பொருத்தமான கல்லாக அமையும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...