எப்படி இருந்தால் கடவுள் ஆகலாம்: பாரதியின் வரிகளில் வாழ்க்கை குறிப்புகள்

Report Print Trinity in வாழ்க்கை முறை

ஆதி சிவனுடைய சக்தி-எங்கள்

அன்னை யருள்பெறுதல் முக்தி;

மீதி உயிரிருக்கும் போதே-அதை

வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி

தேசபக்தியில் திளைத்த நேரத்திலும் ஆன்மிகத்தில் நாட்டமுள்ள நம் பாரதி தெய்வங்களுகென்றே பல பாடல்கள் பாடியுள்ளார்.

அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம்

நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்

நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே

பொன்னவிர் கோயில்களும்-எங்கள்

பொற்புடை மாதரும் மதலையரும்

அன்னநல் லணிவயல்கள்-எங்கள்

ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,

இன்னவை காத்திடவே அன்னை

இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம்.

எம்முயி ராசைகளும்-எங்கள்

இசைகளும் செயல்களும் துணிவுகளும்,

செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்

சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்

மும்மையின் உடைமைகளும்-திரு

முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;

அம்மைநற் சிவசக்தி-எமை

அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்

---- எனப் பல பாடல்களில் இறை மேல் தனக்கிருந்த அசையாத நம்பிக்கையை முண்டாசு கவிஞன் பாடியிருக்கிறார். பாரதியின் காதல் பாடல்கள் என அனைவரும் பாடிக்கொண்டிருக்கும் பல வார்த்தைகள் பாரதி அன்னை காளி மற்றும் சிவசக்தி மேல் பாடிய தெய்வ பாடல்கள்தான்.

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;

தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.

போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்

ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.

.. இது போல பல பாடல்கள் பாரதியால் இறையின் அருள் வேண்டி பாடப்பட்டிருக்கிறது.

அவற்றில் சில நல்முத்துக்களை கோர்த்து மாலையாக்கி வாழ்க்கைக்கு தேவையான வரிகளை இங்கு வரிசைப்படுத்தி உள்ளோம்.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் இன்பம் கிடையாது. அன்புதான் அனைத்திற்குமான ஆதார மொழி.

கடவுள் என்பது மட்டும்தான் உண்மை. மற்ற உயிர்கள் எல்லாம் அதன் பிம்பங்கள்தான்.

கவலை பயத்திற்கு இரையாக வேண்டாம். இறை நம்பிக்கையில் உறுதியோடு இருந்து உழைப்பில் ஈடுபடவும்

அறிவிலும் செயலிலும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும்.

உலகம் வியக்கும் வண்ணம் நன்மை கைகூட வேண்டும் என்றால் அதற்கு பக்தி ஒன்றுதான் வழி

எல்லா சாஸ்திரங்களும் ஒரு உண்மையைத்தான் போதிக்கின்றன. ஆனால் அனைவருக்கும் ஒரே சாஸ்திரம் பொருந்தாது.

தியானப் பயிற்சிகளால் மனதில் நல்ல எண்ணங்கள் படிப்படியாக வளரும்.

தியானத்தை பற்றி எளிமையாக கருதி விட வேண்டாம். மனதை விரும்பியபடி மாற்றும் வலிமை அதற்கு உண்டு.

அன்பை விட சிறந்த குணம் வேறொன்றும் இல்லை. அன்புள்ளம் அனைவரையும் நேசிக்கும். ஒருவரையும் வெறுக்காது. பாகுபாடு காட்டாது.

தர்மம் என்பதை தவிர உலக விடயங்கள் எல்லாம் பொய்யானதுதான்.

நன்மை இது என்று தெரிந்தும் கூட தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தடுமாறுகின்றான்.

உங்களை நீங்களே திருத்தி கொள்வதில் தயக்கம் கூடாது.

ஊர்வாயை மூடும் உலைமூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காலம்.

உள்ளத்தில் நேர்மை தைரியம் இருந்தால் செல்லும் பாதை நேராக இருக்கும்.

மனத்தால் பிறருக்கு தீங்கு நினைத்தாலும் அதற்கான தண்டனையை அடைந்தே தீர வேண்டும்

அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் உறுதி இருந்தால் மனிதன் கடவுளுக்கு நிகரானவன் ஆவான்.

எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் மனித சக்தியால் அதனை நிறைவேற்ற முடியாது.

உண்மையை உயிராக நினைத்து போற்ற வேண்டும். உண்மையான வாக்குதான் அருள்வாக்கு எனப்படுகிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்