முகேஷ் அம்பானியின் சொகுசு வாழ்க்கை

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது.

தனது மூத்த மகனின் திருமணத்தை ஒரு திருவிழா போல கொண்டாட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவே இவர்களின் ஆடம்பர திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஏனெனில், இந்தியாவிலேயே மிகவும் சொகுசான பங்களாவை கட்டி, அதில்தான் இவர்களது குடும்பம் வசித்து வருகிறது. சொகுசு மாளிகையான அந்த வீட்டிற்கு இவர்கள் ஆண்டிலியா என பெயர் வைத்துள்ளார்கள்.

கண்ணாடி மாளிகையான அம்பானியின் இந்த ‘ஆன்டிலியா’ இல்லத்தின் கோபுரங்கள், தெற்கு மும்பையின் மேகத்தைக் கிழித்து செல்வதுபோல் தொடுவானத்தில் காணப்படும்.

27 மாடிகளைக் கொண்ட இந்த உயர்ந்த கண்ணாடி கோபுரத்தின் உயரம், 570 அடியாகும்.

4,532 சதுர மீட்டர் பரப்பளவில் தோராயமாக 49,000 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் அம்பானி குடும்பத்தார் 5 பேர் வசிக்கின்றனர்.

இந்த சொகுசு மாளிகையின் தினசரி பராமரிப்பு பணிகளுக்காக 600 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தளமும் பொதுவான அமைப்பில் அப்பார்ட்மண்ட் போல் அல்லாமல், வெவ்வேறு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக ஒன்பது லிஃப்ட்கள் இருக்கும் இந்த வீட்டில், குடும்பத்தார், விருந்தினர் மற்றும் பணியாளர்களுக்கு என தனித்தனியாக லிஃப்ட்கள் இயங்குகின்றனவாம்.

இந்த வீட்டில் இருக்கும் கிரிஸ்டல் விளக்குகளுடன் கூடிய பாரில் உட்புற/வெளிப்புற மதுபானம் அருந்தகம், ஓய்விடங்கள், கழிப்பறைகள் மற்றும் ஒப்பனை அறைகள் போன்றவை உள்ளது.

இந்த வீட்டில் உல்ல ஐஸ் ரூம் என ஒன்று உள்ளது. குடும்பத்தாரும் விருந்தினர்களும் மும்பை வெயிலில் வதைபடும் போது பயன்படுத்துவதற்காக இந்த அறை உள்ளதாம்.

மூன்று ஹெலிபேட்கள் உள்ள இந்த வீட்டில் தனி ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு மையமும் இயங்கி வருகிறது.

அம்பானி குடும்பத்தார் பயன்படுத்தும் சொகுசு கார்களை நிறுத்த மட்டும் ஆறு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டின் 7-வது தளத்தில் தனியார் கார் சேவை மையம் இயங்கி வருகிறது.

உச்சபட்சமாக, அம்பானியின் இந்த வீடு, ரிக்டர் 8 வரையிலான நிலநடுக்கத்தை உறுதியோடு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers