பணியிடத்தில் இதெல்லாம் செய்ய கூடாதாம் தெரியுமா?

Report Print Harishan in வாழ்க்கை முறை

பணியிடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் பணியை பொறுத்தது.

ஆனால் என்னவெல்லாம் செய்ய கூடாது என அனைத்து துறையினருக்குமே பொதுவாக சில குணங்கள் இருக்கின்றன.

அலுவல் மொழியில் உடல்மொழி எனப்படும் அந்த குணங்களை தெரிந்து கொள்வதன் மூலம் பணியில் சிறந்து விளங்க முடியும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்:

  • இருக்கை நுனியில் அமர்ந்து கொண்டு கால்களை முன்னால் நீட்டிக் கொண்டு சாய்ந்தால் நீங்கள் பணியில் அலட்சியமாக இருப்பதாக அர்த்தமாம். அவ்வாறு சாய்ந்து உட்காருவதை தவிர்ப்பது சிறப்பு.
  • அலுவலகத்தில் என்ன தான் நண்பராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட இடத்திற்குள் அதிகம் நுழையாமல் இருப்பதே நல்லது, குறைந்த பட்சம் மூன்று முதல் 8 அடி இடைவெளி விட்டு அவர்களுடன் பேசுவதன் மூலம் நல்ல உறவை தொடர முடியும்.
  • உடன் பணியில் இருப்பவர்களை அடிக்கடி பார்ப்பதை தவிர்க்க வேண்டும், அப்படி அவர்களை பார்த்துக் கொண்டே இருப்பதால் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த நேரிடும் என்பதால் அவர்களை பார்க்காமல் இருப்பது நல்லது.
  • மிக முக்கியமான ஒரு குணம், உயர் அதிகாரியோ அல்லது சக பணியாளரோ அவர்களுடன் பேசுகையில் கண்களை பார்த்து பேசுவது அவசியம். அது உங்களின் உண்மைத் தன்மையை கணிக்கும் முறையாகும்.
  • நீங்கள் தாமதமாக சென்றாலும் சரி பணி இடத்திற்குள் நுழைந்தவுடன் அனைவருக்கும் ஒரு ’ஹலோ’ சொல்ல தவறி விடாதீர்கள், நல்ல சூழலை உருவாக்க அந்த ’ஹலோ’ நிச்சயம் உதவியாக இருக்கும்.
  • மிகவும் சலிப்புடன் பணியில் இருக்காதீர்கள். அது உங்கள் பணியை நீங்கள் அலட்சியம் செய்வது போல் தோற்றத்தை உருவாக்கிவிடும். அப்படி மிகவும் போர் அடித்தால் சிறிது தூரம் நடந்துவிட்டு மீண்டும் அமர்ந்து பணியை தொடங்கினால் சிறப்பு.
  • அலுவலகத்தில் ஒருவருடன் பேசும்போது நகம் பிய்ப்பது, நகம் கடிப்பது, தலையை கோதுவது போன்ற செயல்கள் செய்தால் நீங்கள் மிகவும் நடுக்கத்துடன் இருப்பதாக அர்த்தமாம், ஆகையால் அதை தவிர்ப்பது நல்லது.

  • நேராக நின்று சிரித்த முகத்துடன் பேசினால் அனைவருக்கும் உங்கள் மீது ஒரு தனி கவனம் வருமாம், அப்படி பேசுபவர்களிடம் கூடுதல் அறிவு இருப்பதாக அர்த்தம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்