ஐந்து ஆண்டு கால புகைப்படத்தில் ஐக்கியமான ஐந்து நண்பர்கள் !!!

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
212Shares
212Shares
ibctamil.com

எவ்வித காரணமும் இல்லாமல் சட்டென்று வரும் அன்பு தான் காதல், இதே போல் வருவது தான் நட்பு! அப்படிப்பட்ட நட்பிற்கு எடுத்துக்காட்டாய் திகழும் வகையில் அமைந்துள்ளது இவர்களது செயல்.

ஐந்து நண்பர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுக்கின்றனர்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கும்போது, என்ன தோரணையில், எந்த திசையில், எப்படி அமர்ந்திருக்கிறார்களோ அதே போல் புகைப்படங்களில் இருக்கின்றனர்.

மேலும் கையில் ஏதாவது பொருள் வைத்திருப்போறும் அதையே மீண்டும் எடுக்கும் புகைப்படங்களில் செய்கின்றனர்.

பொதுவாக மனிதனின் நிலை மாறலாம், அனால் பகிர்ந்து கொள்ளும் நினைவுகள் மாறாது என்பதற்கு சிறந்த உதாரணம் புகைப்படம் தான். 1982- ல் பள்ளி படிப்பை முடித்த John Wardlaw தனது நண்பர்களான John Dickson, Mark Rumer, Dallas Burney, மற்றும் John Molony-யை California-வில் அமைந்துள்ள Copco Lake அருகே அவரது தாத்தா-பாட்டியின் இல்லத்திற்கு அழைப்பு விடுத்த போதே இந்த செயல் துவங்கியது.

இதை பற்றி Dickson கூறுகையில் , இந்த புகைப்படம் கேமராவில் உள்ள self-timer எனும் தானியங்கி விருப்பத்தின் மூலம் எடுத்த பொது அவர்களுக்கு 19 வயதாம்.மேலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நண்பர்களுள் யாராவது இல்லாமல் போனாலும் சிறிய இடைவெளி விட்டு 5 ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டே இருப்பர் என்று கூறியுள்ளார்.

இந்த புகைபடங்களை ஆராய்ந்து பார்த்தால் நண்பர்களின் கால ஓட்டைத்தை குறிக்கும் வகையில், வயதில் முதிர்ச்சியும், மனதில் மகிழ்ச்சியையும் நாம் கண்டறியலாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்