இந்த கிழமையில் மட்டும் நீங்கள் பிறந்திருந்தால்....?

Report Print Printha in வாழ்க்கை முறை
925Shares
925Shares
ibctamil.com

ஒவ்வொரு கிழமைக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உண்டு. அதை வைத்து தான் ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர்களின் பொதுவான குணநலன்கள் கணிக்கப்படுகிறது.

அதேபோல் புதன் கிழமை பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

புதன் கிழமை

வாரத்தின் நான்காவது கிழமையான புதன் கிழமை, புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது சூரியக் குடும்பத்திலேயே மிகச்சிறிய கிரகம். மெர்குரி என்னும் புதன் ஞானம், நுண்ணறிவு, நடைமுறை ஆகியவற்றைக் குறிக்கிறது.

புதன் கிழமை பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் புதன் உள்ளதால், புதன் கிழமையில் பிறந்தவர்கள் தொலை நோக்கு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களால் மற்றவர்களது மனதில் தோன்றுவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் நல்ல பேச்சாளர்களாக, தொடர்பாளர்களாக இருப்பார்கள்.

இவர்களது பேச்சுக்கள் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் இருக்கும். நல்ல நகைச்சுவையாளர் என்றும் கூறலாம். ஒரே நேரத்தில் இரண்டு விடயங்களில் துல்லியமாக கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதில் வல்லவராக திகழ்வார்கள்.

இந்த கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். முக்கியமாக இவர்கள் அனைத்திற்கும் விடை காண வேண்டுமென்ற ஆவலைக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் எதையேனும் யோசித்தவாறு அல்லது செய்தவாறு இருப்பார்கள். இவர்களுக்கு பயணம் மேற்கொள்வது என்பது பிடிக்கும்.

ஆனால் தொலை தூர பயணத்தை விட குறைந்த தூர பயணம் மேற்கொள்வதையே விரும்புவார்கள். இவர்கள் அடிக்கடி எதிலும் கவனக் குறைவாகவே இருப்பார்கள்.

புதன் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாளர்கள் என்பதால், இவர்களுக்கு சேல்ஸ்மேன், அரசியல் மற்றும் வக்கில் தொழில் பொருத்தமாக இருக்கும்.

மேலும் இவர்களுக்கு கணித திறமையும் உள்ளதால், இவர்களுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

இவர்களுக்கு நண்பர்களை அமைத்துக் கொள்வதில் சிரமமே இருக்காது. ஏனெனில் இவர்களது பேச்சுத் திறமையே, இவர்களுக்கு நண்பர்களை அமைத்துக் கொடுக்கும்.

புதன் கிழமையில் பிறந்தவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொண்டிருக்காமல், தன் மனதில் பட்டதை பளிச்சென்று வெளிப்படையாக பேசி விடுவார்கள்.

அதனாலேயே இவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுவார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள்.

புதன் கிழமையில் பிறந்தவர்களது காதல் வாழ்க்கையில் சண்டை என ஒன்று வந்து விட்டால், இவர்களது பேச்சுக்கள் காயப்படுத்தும் வகையில் இருக்கும்.

இவர்களிடம் உள்ள சிறந்த பண்பு என்றால், அது என்ன பிரச்சனை வந்தாலும் வாழ்க்கைத் துணையை மாற்ற நினைக்க மாட்டார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்