இந்த ரேகை உங்க கையில் இருக்கா?

Report Print Printha in வாழ்க்கை முறை
739Shares
739Shares
ibctamil.com

ஜோதிடங்களில் பலவகை இருந்தாலும் அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடத்தையே. அதுவும் நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்கள் ஆகியவற்றை பற்றி கூறிவிடலாம்.

அந்த வகையில் ஒரு நபரின் உள்ளங்கையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

H ரேகை உள்ள நபர்களின் குணாதிசயங்கள்?

H ரேகையானது மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகி இருக்கும். இது இதயம், லக் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது.

இந்த H ரேகை கொண்டவர்கள், அவர்களது வாழ்வில் 40 வயதிற்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். நாற்பது வயதிற்கு பின் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.

அவர்களது வாழ்வில் திடீர் பொருளாதார எழுச்சியை நாற்பது வயதுக்கு மேல் காண்பார்கள். அவர்களது பெரும்பாலான முயற்சிகள் மற்றும் வேலைகள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.

நாற்பது வயதிற்கு முன் முயற்சி செய்த கடின உழைப்பிற்கான பயன்கள் கூட நாற்பது வயதிற்கு பின்பு கிடைக்கும்.இந்த H ரேகை இருக்கும் நபர்கள் இயற்கையாகவே உணர்ச்சிவசப்பட கூடிய நபர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களை ஏமாற்றவும் செய்வார்கள்.

இவர்கள் தாங்கள் விரும்பும் காதலிக்கும், நபர்களுக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை தாண்டி அதிகமாக உதவுவார்கள்.

H ரேகை இருக்கும் நபர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள். அதிக தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருப்பார்கள்.

அதனால் இவர்கள் கடினமாக, விடாப்படியாக உழைத்து கொண்டே இருப்பார்கள். அறிவாளி என்பதை தாண்டி, இவர்களிடம் புத்திகூர்மை சிறப்பாக இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்