அழகு பெண்ணின் கேள்வியும்...அம்பானியின் பதிலும்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
111Shares
111Shares
ibctamil.com

25 வயதுடைய பெண் ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். நான் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், கோடீஸ்வர ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மேலும், பார்ப்பதற்கு நல்ல ஸ்டைல் மற்றும் நல்ல ரசனையுள்ள பெண். எனவே நான் என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு பதிலளித்து முகேஷ் அம்பானி,

உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். உங்கள் இந்த சந்தேகத்திற்கு ஒரு முதலீட்டாளராக நல்ல தீர்வளிக்க நான் விரும்பிகிறேன்.

தவறான தேர்வு! எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன்.

இதற்கான விளக்கத்தையும் நான் அளிக்க முனைகிறேன். அழகும், பணமும்! அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும்.

அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் ஒன்று. பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும் ஒன்று (சரியாக உபயோகித்தால்).

பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும்.

செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார். அழகை மறந்துவிடுங்கள்!

எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விடுங்கள். மேலும், நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளரலாமே. நூறு சம்பாதிக்கும் மணமகனை தேடுவதை விட, இது சிறந்த தேர்வு. என கூறி முகேஷ் அம்பானி தனது பதிலை முடித்துக் கொண்டார்.

ஆனால், இந்த பதில் முகேஷ் அம்பானி எழுதியது தானா என்பதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்