உங்களது கட்டை விரல் எப்படி இருக்கு? நீங்கள் இப்படிபட்டவராம்

Report Print Printha in வாழ்க்கை முறை
171Shares
171Shares
ibctamil.com

ஜோதிடத்தில் ஒருவரது கட்டை விரலின் இயல்பு அமைப்பு மற்றும் கைரேகை அடுக்கு பகுதிகள் கொண்டு ஒருவரது பொது குணாதிசயம் மற்றும் அவரது செயற்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை கூறி விடலாம்.

நேரான கட்டைவிரல்

சிலருக்கு மட்டுமே அவர்களது கட்டை விரல் எந்தவிதமான வளைவுகளும் இன்றி எலும்பு வளையாமல் நேராக இருக்கும்.

அப்படியானவர்கள் பெரும்பாலும் மிகவும் சீரியஸான நபர்களாக இருப்பார்களாம். அவர்களால் மற்றவர்கள் சந்தோஷம் சீர்குலையும் என்று ஜோதிடம் கூறுகிறது.

கோணலான கட்டைவிரல்

கட்டைவிரல் கோணலாக, பின்னோக்கி வளைந்தது போல இருந்தால், அவர்கள் எதையும் வெளிப்படையாக செய்யும் நபர்களாக இருப்பார்கள்.

அது காதலாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி தங்கள் உணர்வை மறைத்து வைத்துக் கொள்ள மாட்டார்கள். தங்கள் கருத்துகளை முகத்திற்கு முன் பேசி விடுவார்கள்.

மிகவும் வளைந்த கட்டை விரல்

கட்டை விரலானது ஆள்காட்டி விரலை போன்று பின்னாடி நன்கு வளைந்து நேராக இருப்பது போல இருந்தால், அவர்கள் அமைதி, நேர்மை போன்ற நல்ல குணங்களை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் பெரும்பாலும் கலை அல்லது கிரியேட்டிவ் துறையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.

கட்டைவிரலின் முதல் பாதி பெரிதாக

கட்டை விரலில் முதல் பாதி விரல் பெரிதாகவும், இரண்டாது பாதி விரல் சிறிதாகவும் இருந்தால், அவர்கள் யாருடைய அறிவுரைக்கும் காத்திருக்க மாட்டார்கள். எந்த செயலிலும் சிறந்து செயல்பட முயல்வார்கள்.

கட்டைவிரலின் இரண்டாம் பாதி பெரிதாக

கட்டைவிரலின் இரண்டாம் பாதி பெரிதாக இருந்தால், அவர்கள் எதிலும் லாஜிக்கை எதிர்பார்ப்பார்கள். யார் என்ன கூறினாலும் அதை காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள்.

காதல், வேலை போன்று எதுவாக இருந்தாலும் அதில் தங்களைத் தானே ஒரு எல்லை வகுத்து அதற்குள் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்