சிவப்பு மச்சம் இந்த இடத்தில் இருக்கா? அவங்க....?

Report Print Printha in வாழ்க்கை முறை
360Shares
360Shares
ibctamil.com

நம் உடலில் எந்த இடத்தில் மச்சங்கள் இருக்கிறது என்பதை வைத்து அதற்கான பலன்களை தெரிந்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த மச்ச பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரக்கூடியதாக இருக்கும்.

மச்சத்தின் பலன்கள்

 • பெண்களுக்கு புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண் மிகவும் நல்லகுணம் பெற்று உயரிய அந்தஸ்து அடைவாள்.

 • பெண்களின் காதில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு ஆண் மகன் பிறப்பான்.

 • பெண் நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெற்று சிறந்து விளங்குவாள்.

 • பெண்ணின் மூக்கில் மச்சம் இருந்தால் அந்த பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.

 • பெண்ணின் உதட்டில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணிடம் சாந்தம், உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாட்சம் ஆகிய குணங்கள் இருக்கும்.

 • பெண்களின் கழுத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் மூலம் உருவாகும் சந்ததிகள் நன்கு விருத்தியடையும்.

 • நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் பேசும் குணம் கொண்டவளாக இருப்பாள்.

 • தாடையில் மச்சம் இருந்தால் அந்த பெண் வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்து பெற்று விளங்குவாள்.

 • பெண்களின் மார்பகத்தில் சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள். அதுவே கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகம் குறைவாக இருக்கும்.

 • உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் தாம்பத்யத்தில் அதிருப்தி உண்டாகும் என்று மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம் கூறுகிறது.

 • பெண்களின் முதுகில் மச்சம் இருந்தால் அவள் மிகவும் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள்.

 • பெண்களின் தொப்புளில் மச்சம் இருந்தால் அவளின் சந்ததி விருத்தி அடையும். உணவிற்கு பஞ்சம் ஏற்படாது.

 • பெண்களின் வலது தொடையில் மச்சம் இருந்தால் அவள் வாழ்க்கையில் உயர்வு பெறுவாள்.

 • பெண்களின் இடது தொடையில் மச்சம் இருந்தால் அது துரதிஸ்தம். அதுவே வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.

 • பெண்களின் இடது முழங்காலில் மச்சம் இருந்தால் அவள் இறை நம்பிக்கை இல்லாமல் இருப்பாள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்