இதில் என்ன நிறம் பிடிக்கும்? நீங்கள் இப்படிபட்டவர்களாம்

Report Print Printha in வாழ்க்கை முறை
124Shares
124Shares
ibctamil.com

நிறங்கள் மற்றும் அதன் செல்வாக்கை பற்றி பல ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஒருவருக்கு மிக பிடித்த நிறத்திற்கு ஏற்ப அவர்களின் குணங்கள் அமையும் என்பது அறியப்பட்டது.

வெள்ளை

வெள்ளை நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் தூய்மை, தீங்கின்மை மற்றும் எளிமை ஆகிய குணங்களை கொண்டவர்கள். வெள்ளை நிறம், இளமை மற்றும் தூய்மையின் மீது திடமான சித்தாந்தங்களை கொண்டுள்ளது.

அதனால் வெள்ளை நிறத்தை விரும்புவர்கள் பூர்ணத்துவம் மற்றும் இயலாத கொள்கைகளின் மீது ஆர்வம் கொண்டவராகவும், எளிய வாழ்க்கையின் மீது அதிக நாட்டத்துடன் இருப்பார்கள்.

சிவப்பு

சிவப்பு நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் வலிமை, ஆரோக்கியம் மற்றும் உற்சாகம் ஆகிய குணங்களை கொண்டவர்கள். சிவப்பு நிறம் வெளிப்படை, ஆக்கிரமிப்பு, தீவிரம் மற்றும் உணர்ச்சிவசம் ஆகியவற்றை குறிக்கும்.

இந்த நிறத்தை விரும்புவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், சலிப்பூட்டுவதை தாங்கி கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

பிங்க்

பிங்க் நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் அன்பை எதிர்ப்பார்ப்பார்கள். அதே போல் காதலிக்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பார்கள்.

தங்களை மென்மையானவர்களாக காட்டிக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள். இவர்கள் வசீகரம் மிக்கவராகவும், கனிவான உள்ளம் கொண்டவராகவும் திகழ்பவர்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் அலங்காரம் மற்றும் குதூகலத்தை விரும்பும் நபராக இருப்பார்கள்.

இவர்கள் சற்று நாடகத்தனமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

மஞ்சள்

மஞ்சள் நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் சந்தோஷம், அறிவு மற்றும் கற்பனை, துணிவு ஆகிய குணத்தினை கொண்டவர்கள்.

இவர்கள் புதுமை மற்றும் சுய பூர்த்தியை தேடி அலைவார்கள். மேலும் இவர்கள் நல்ல வணிக தலைமை மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்.

பச்சை

பச்சை நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் அமைதி, மென்மை, மற்றும் உண்மை ஆகிய குணத்தை கொண்டவர்கள்.

இவர்கள் மற்றவர்களால் மிக எளிதாக சுரண்டப்படுவார்கள். ஆனால் இவர்கள் நல்ல எண்ணங்களுடன், மரியாதைக்குரியவராக இருப்பார்கள்.

நீலம்

நீலம் நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் மென்மை, இரக்கம் மற்றும் அக்கறை ஆகிய குணங்களை கொண்டவர்கள்.

இவர்கள் உணர்ச்சிமிக்க மற்றும் சுய கட்டுப்பாடுகளை கொண்டவர்களாக இருப்பார்கள், உண்மையானவராக இருந்தாலும் கூட நெகிழ்வற்ற நம்பிக்கைகளுக்காக கவலை கொள்பவர்களாக இருப்பார்கள்.

லாவெண்டர்

லாவெண்டர் நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் உயர்ந்த நிலையில் வாழும் எணங்களை கொண்டவர்கள். அதனால் இவர்கள் இழிந்த எதையும் காண மாட்டார்கள். எப்போதும் நேர்த்தியாகவும் அழகாக ஆடை அணிந்தும் காணப்படுவார்கள்.

ஊதா

ஊதா நிறம் யாருக்கு பிடிக்கிறதோ, அவர்கள் தனித்துவம் வாய்ந்த, நகைச்சுவை உணர்வு மிக்க மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதில் கோபம் அடைகிற மற்றும் கலையாற்றல் மிக்கவராக இருப்பார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்