பிரபலமாகும் கட்டிப்பிடி வைத்தியம்: மணிக்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Report Print Arbin Arbin in வாழ்க்கை முறை
2084Shares
2084Shares
ibctamil.com

அமெரிக்காவில் தொழில்முறை கட்டிப்பிடி வைத்தியம் சமீப காலமாக மிகவும் பிரபலமடைந்து வருவதுடன் பணம் கொழிக்கும் தொழிலாகவும் உருவாகியுள்ளது.

பாலியல் இச்சையை தூண்டாத ஒரு மணி நேர கட்டிப்பிடித்தலுக்கு கட்டணமாக தொழில்முறை நபர்கள் 60 பவுண்ட்ஸ் வரை வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி தொழில்முறை நபர்கள் ஒரு இரவு முழுவதும் வாடிக்கையாளர்களை கட்டியணைத்து தூங்குவதற்கு 300 பவுண்ட்ஸ் கட்டணமாக வசூலிக்கின்றனர்.

குறித்த சேவையானது மன அழுத்தம் தரக்கூடிய பணியில் ஈடுபடும் பெண்கள் அல்லது வேலை நிமித்தம் கணவர்களை பிரிந்து வாழும் பெண்கள் ஆகியோர் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சேவையால் பலர் பயனடைந்துள்ளதாகவும் இச்சேவையை அளித்துவரும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த 2000 ஆண்டுகளில் இருந்துவந்த கட்டிப்பிடித்தல் தொடர்பான மனநிலை தற்போது பெருமளவு மாறியுள்ளதாகவும்,

யோகா போன்ற ஒரு கலையாகவே கட்டிப்பிடி வைத்தியத்தையும் வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர் எனவும்,

இதனால் கிடைக்கப்பெறும் உளவியல் பலன்கள் மிக அதிகம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாலியல் தொடர்பான உந்துதலுக்கு மட்டுமே பயன்படும் என கட்டிப்பிடத்தலை தொடர்புபடுத்தி வந்த சமூகம் தற்போது மனநலம் தொடர்பான ஊக்கசக்தியாகவே இதை கருதுகின்றனர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்