உங்க கையில் இந்த குறிகள் உள்ளதா? இந்த பிரச்சனை உள்ளதை குறிக்கிறது

Report Print Printha in வாழ்க்கை முறை
328Shares
328Shares
ibctamil.com

கைரேகை ஜோதிடத்தின் மூலம் ஒருவரின் கையில் இருக்கும் ரேகையை வைத்து அவர்களின் எதிர்காலம், உடல் ஆரோக்கியம், குழந்தைகள், திருமண வாழ்க்கை போன்றவற்றை கணித்து விடலாம்.

அதுமட்டுமில்லாமல் கைரேகை ஜோதிடத்தின் மூலம் ஆண் மற்றும் பெண்களின் கைகளில் உள்ள ரேகை மற்றும் குறிகளை கொண்டு கருவுறுதல், கருச்சிதைவு, சுறுசுறுப்புத் தன்மை மற்றும் ரொமான்டிக் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.

வலை வடிவம்

ஒரு பெண்ணின் கையில் உள்ள சுக்கிர மேட்டில் வலைப் போன்ற வடிவம் இருந்தால், அது அப்பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட இருப்பதை குறிக்கிறது.

வளைவு வடிவம்

ஒருவரது மணிக்கட்டுப் பகுதியில் உள்ள ரேகை வெளிப்புறமாக வளைந்து இருந்தால், அது சந்ததி இழப்பைக் குறிக்கிறது என்று அர்த்தம்.

உட்புறம் வளைவு

ஒரு பெண்ணின் மணிக்கட்டுப் பகுதியில் ரேகை உட்புறமாக வளைந்து இருந்தால், அது கருவுறுவதில் உள்ள பிரச்சனை மற்றும் தாமதமாக குழந்தை பிறப்பதைக் குறிக்கிறது என்று அர்த்தம்.

பிரிவு ரேகை

ஒரு பெண்ணின் கையில் உள்ள ஆயுள் ரேகை சுக்கிர மேட்டை நோக்கி வரும் போது, அதில் பிரிவு இருந்தால், அது கருவுறுதல் பிரச்சனை, கருப்பை நுண்குமிழிகள் மற்றும் சிறுநீர் பாதை அகிய பிரச்சனைகளைக் குறிக்கும்.

நடுவிரலை நோக்கிய ரேகை

ஒருவரது கையில் சுண்டு விரலில் இருந்து நடுவிரலை நோக்கி ரேகை சென்றால், அது அவர்களுக்கு விபத்து மற்றும் குழந்தையின்மை பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

X குறி ரேகை

பெண்களின் கையில் நடுவிரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையே X குறியில் ரேகை இருந்தால், அது மலட்டுத்தன்மை உள்ளது என்பதை குறிக்கும்.

அதுவே ஒரு ஆணின் கையில் உள்ள சுக்கிர மேட்டில் X குறி இருப்பின், அது அந்த ஆணுக்கு பாலுணர்ச்சி குறைவு, விந்தது குறைபாடு, புரோஸ்டேட் சுரப்பி நோய்கள் உள்ளதை குறிக்கும்.

ஆயுள் ரேகை

ஆண்களில் கையில் உள்ள சுக்கிர மேட்டில் செல்லும் ஆயுள் ரேகை பெருவிரலில் தொடங்கி, மணிக்கட்டிற்கு சென்றால், அவர்களுக்கு ஆண்மை குறையு, பாலியல் பிரச்சனைகள் இருப்பதை குறிக்கிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்